Katharbasha Endra Muthuramalingam Trailer | காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரைலர் வெளியீடு

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சித்தி இட்னானி இவர் தற்போது ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ட்ரைலர் வெளியீடு

படத்தின் டிரைலர் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருப்பதாகவும், 2.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது, அதே நேரத்தில் அதிரடி டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என டைட்டிலேயே விவகாரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரில் வரும் அந்த அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு வசனத்தை விட இப்போ அல்லாவும் அய்யனாரும் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு என்கின்ற வசனம் தான் முக்கியம் என ஆர்யா பேசியுள்ளார். இவர் பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்குமா என்பதுதான் தெரியவில்லை. ஆனால் மதங்களை கடந்து மனிதம் தான் என்பதை வலியுறுத்தும் இதுபோன்ற படங்கள்தான் வரவேண்டும் என்றும் இந்து மற்றும் இஸ்லாமியர்களை பகைமை கொள்ளச் செய்யும் ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற படங்களுக்கு இங்கே இடமில்லை என ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

படத்தின் மையக்கரு

இந்து-முஸ்லிம்கள் சகோதர சகோதரிகளாக வாழும் ஊரில் மதக் கலவரத்தைத் தூண்டி சிலர் பிரச்சனையை கிளப்ப பார்க்க அதை ஆர்யா எப்படி எதிர்த்து போராடுகிறார் என்பது தான் படத்தின் கதையாகும். ஜூன் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply