Kaveri Maran Has Donated 1 Crore : குழந்தைகளில் ஆப்ரேஷன்களுக்கு ரூ.1 கோடி வழங்கிய காவேரி மாறன்!

Kaveri Maran Has Donated 1 Crore :

ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி (Kaveri Maran Has Donated 1 Crore) வழங்கியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்து வருகிறது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே அனைத்து சர்ச்சைகளுக்கும் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் மற்ற மாநிலங்களிலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளிலும் தரமான வெற்றியை பதிவு செய்து நல்ல லாபம் கண்டுள்ளது. ஜெயிலர் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தயாரித்த பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய் அதிக லாபம் ஈட்டியதால் சன் பிக்சர்ஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான கலாநிதி மாறன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 110 கோடி ரூபாய் வரை பங்குகளை வழங்கி BMW காரை அன்பளிப்பாக வழங்கிய வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதேபோல் இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் குறிப்பிட்ட தொகையை காசோலையாக கொடுத்தது மட்டுமின்றி சொகுசு காரையும் பரிசாக அளித்துள்ளனர்.

இதையடுத்து படக்குழுவினருக்கும், இப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கும் கலாநிதி மாறன் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியை குழந்தைகளுக்கு (Kaveri Maran Has Donated 1 Crore) உதவி செய்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 100 குழந்தைகளின் இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடி காசோலையை அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் (Kaveri Maran Has Donated 1 Crore) வழங்கினார். அவரது செயலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினிகாந்த் குழந்தைகளின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார் என்று ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply