Keerthy Suresh Thanked The Fans : நீங்க இல்லாம நான் இல்லை | ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Thanked The Fans :

கீர்த்தி சுரேஷ் திரையுலகில் நடிகையாக நுழைந்து தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி (Keerthy Suresh Thanked The Fans) தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் மற்றும் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2013 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தார். இதுவே தமிழில் அவருக்கு முதல் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்திருந்தார். 

இத்திரைப்படம் கீர்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோருடன் ரஜினி முருகன், சீரழி, ரெமோ, மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார். அதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் பைரவா, அந்த படத்தை முடித்த கீர்த்தி விஜய்யுடன் கையோடு சர்கார் படத்திலும் நடித்தார். அதன்பிறகு டோலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ், மகாநதி என்ற தரமான படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.

தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என சவுத் முதல் நார்த் வரை பிசியான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி. இந்நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை (Keerthy Suresh Thanked The Fans) வெளியிட்டுள்ளார். வீடியோவில், அவர் தனது பெற்றோருக்கும் தனது வழிகாட்டியான இயக்குனர் பிரியதர்ஷனுக்கும் நன்றி தெரிவித்தார், இறுதியாக தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். நீங்க இல்லாமல் நான் இல்லை என்று உணர்ச்சிகரமாக பேசிய அவர், கடைசியாக தனது வெறுப்பாளர்களுக்கு ஒரு செய்தியை கொடுத்துள்ளார். அவர்களின் வெறுப்பும் தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு வர உதவியது என்கிறார் கீர்த்தி. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து (Keerthy Suresh Thanked The Fans) வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply