Kerala Fans Waiting For Vijay at The Airport : விஜய்க்காக விமானநிலையத்தில் காத்திருந்த கேரள ரசிகர்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘The greatest of all time’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் நேற்று கேரளா செல்லவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் போர்ஸ்டர், பேனர்கள் மற்றும் பொருட்களை வைத்து (Kerala Fans Waiting For Vijay at The Airport ) அவரது வருகைக்காக கேரளா ரசிகர்கள் காத்திருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசியல் பிரவேசத்தை அறிவித்த விஜய், GOAT  மற்றும் தளபதி 69 ஆகிய படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. GOAT படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய நிலையில், அடுத்த மாதத்துடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்ல விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின் ‘The greatest of all time’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சென்னை, பங்ககா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், படப்பிடிப்பு தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக படக்குழுவினர் முன்னதாக கேரளா சென்றிருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் நேற்று கேரளா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் இவரது படம் வெளியாகும் போது மற்ற படங்களின் வெளியீடு அங்கு தள்ளி வைக்கப்படுகிறது. அந்தளவுக்கு கேரளாவில் அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

விஜய்க்காக காத்திருந்த கேரள ரசிகர்கள் :

முன்னதாக 14 ஆண்டுகளுக்கு முன்பு ‘காவலன்’ படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபுவின் ‘The greatest of all time’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக படப்பிடிப்பு நடக்கும் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் விஜய்யின் பேனர்களை உயரத்தில் வைத்து விஜய்யை போலவே பைக் ஊர்வலம் நடத்தி கேரளா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவரது வருகைக்காக ஏராளமான கேரள ரசிகர்கள் விமான நிலையத்தில் (Kerala Fans Waiting For Vijay at The Airport ) காத்திருந்தனர். தளபதி விஜய் சரியாக மாலை 5:00 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். அவருக்கு விமான ஊழியர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்திற்குள் நுழைந்த விஜய், தனக்காகக் காத்திருந்த ரசிகர்களை கையசைத்து, கைதட்டி தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்தார். கேரளாவில் படப்பிடிப்பு தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மாஸ்கோ செல்லவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரண்டு வாரங்கள் அங்கு நடக்க உள்ளது. GOAT படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் நிறைவடையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply