Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாரம்பரிய உணவாக அரிசி இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் மக்களின் முக்கிய உணவாகவும் அரிசி உள்ளது. மேலும் அரிசி நார்ச்சத்து, வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். தற்போது இந்த பதிவில் கேரளாவில் பாலக்காடு பகுதியில் தயாரிக்கப்படும் மட்டை அரிசி (Kerala Matta Rice Benefits In Tamil) சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரள மட்டை அரிசி (Kerala Matta Rice Benefits In Tamil)

மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது கேரளா மட்டை அரிசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த மட்டை அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானது மற்றும் தனித்துவமான சுவையைக் கொண்டது. கேரள பகுதியில் இந்த அரிசியை (Kerala Matta Rice Benefits In Tamil) பாலக்கடன் மட்டை அரிசி, ரோஸ் மட்டை அரிசி, சிவப்பு புழுங்கல் அரிசி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இரத்த அழுத்தம் குறையும்

இந்த கேரள மட்டை அரிசியில் நார்ச்சத்து மற்றும் கிளைசீமிக் இன்டென்ஸ் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை இரண்டும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் மட்டை அரிசியை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் (Kerala Matta Rice Benefits In Tamil) கட்டுப்பாட்டில் இருப்பதுடன் பெருங்குடலின் ஆரோக்கியம் மேம்படும்.

எலும்புகள் வலுவாக இருக்கும்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியை விட மட்டை அரிசியில் கால்சியம் அதிகம் உள்ளன. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிக அவசியமான சத்தாகும். எனவே வாரத்திற்கு ஒருமுறை உணவில் இந்த மட்டை அரிசியை சேர்த்து வந்தால் கால்சியம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் தவிர்க்கலாம்.

கொலஸ்ட்ரால் குறையும்

கேரள மட்டை அரிசியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இதய நோய் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். ஏனெனில் இந்த மட்டை அரிசி இரத்த நாளங்களில் (Kerala Matta Rice Benefits In Tamil) இரத்தம் உறைவதை தடுப்பதுடன் அடைப்புக்களையும் குணமாக்குவதுடன் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும்  குறைக்கிறது.

செரிமானம் சிறப்பாக இருக்கும்

இந்த கேரள மட்டை அரிசி நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்தானது அதிகளவில் உள்ளது. தினமும் ஒருவர் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த (Kerala Matta Rice Benefits In Tamil) உணவை சாப்பிட்டு வந்தால்  செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply