Kerala School Introduces IRIS : திருவனந்தபுரத்தில் நாட்டின் முதல் AI ஆசிரியர் அறிமுகம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆசிரியர் அறிமுகம் (Kerala School Introduces IRIS) செய்யப்பட்டுள்ளது. காலம் மாற மாற தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி என்பது தற்போது அதிகரித்து கொண்டுதான் உள்ளது. அதிலும் சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவின் Artificial Intelligence (AI) வளர்ச்சி என்பது மனிதர்களின் வேலையையே பறித்து விடுமோ என்ற ஐயத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு  வளர்ச்சியை கண்டு வருகிறது.

சினிமா துறை மற்றும் பத்திரிக்கை துறை, தொழில் துறை போன்றவற்றில் எல்லாம் தடம் பதிக்க ஆரம்பித்துள்ள Artificial Intelligence (AI) தற்போது பள்ளிக்கூடத்தினையும் விட்டுவைக்கவில்லை. அண்மையில் அமெரிக்காவில் 18 வருடங்களாக  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை செயற்கை நுண்ணறிவு (AI) பேச உதவியுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மருத்துவ துறையில் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல வித்தயாசமான அதிசயங்களை படைத்து வருகிறது. தற்போது புது முயற்சியாக நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியரான “ஐரிஸ்” என்பவரை கேரளா மாநிலம் அறிமுகம் (Kerala School Introduces IRIS) செய்துள்ளது.

Kerala School Introduces IRIS :

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கெ.டி.சி.டி (KTCT) உயர் நிலைப்பள்ளியில் சிந்தனை திறனுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஆசிரியர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ ஆசிரியரின் பெயர் “ஐரிஸ்”  இதை கேரளாவைச் சேர்ந்த “மகேர் லாப்ஸ் இனம்” நிறுவனம் தயாரித்திருக்கிறது. கேரளாவின் கல்வித்துறை வளர்ச்சியின் புதிய அங்கமாக முதல் செயற்கை ஆசிரியர் ஐரிஸை அறிமுகம் (Kerala School Introduces IRIS) செய்துள்ளனர். மேக்கர்லேஸ் எடுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஆசிரியரான “ஐரிஸ்” உருவாக்கப்பட்டுள்ளது. AI ஆசிரியர் ஐரிஸ் மூன்று மொழிகள் பேசும் திறனையும் சிக்கலான பல கேள்விகளை சமாளிக்கும் திறனையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கிய தொழில்நுட்ப நிறுவனம் AI ஆசிரியர் பற்றிய ஒரு வீடியோ காணொளி பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. Artificial Intelligence (AI) ஆசிரியரான ஐரிஸின் தனிப்பட்ட குரல் உதவி, கையாளுதல் திறன்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பித்தல் ஆகிய தனிபட்ட திறமைகளுடன் இந்த செயற்கை நுண்ணறிவு (Kerala School Introduces IRIS) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் படிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஐரிஸ் ரோபோ பாதங்களில் உள்ள நாலு வீல்கள் மூலம் நகர்ந்து சென்று மாணவர்களிடம் உரையாட முடியும். இத்தனை செயல் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்பமானது நிச்சயம் கல்வித்துறையில் புதிய பல மாற்றங்கள் நிகழ்த்தும் என்பதுதான் தற்போதைய எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply