KGF 3 : பிரசாந்த் நீல் கொடுத்த மாஸ் அப்டேட்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சாலார் படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இதற்கான வேலைகளில் இயக்குனர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், யாஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘கேஜிஎஃப்’ படத்தின் மூன்றாம் பாகம் (KGF 3) குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய படம் என்று ‘கேஜிஎஃப்’ படத்தினை சொல்லலாம். இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகரானார் யாஷ். கன்னட திரையுலகில் மட்டுமே அறியப்பட்ட இவர், ‘கேஜிஎஃப்’ படத்தின் மாபெரும் வெற்றியால் இந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக மாறியுள்ளார். ‘கேஜிஎஃப்’ படத்தின் மூன்றாம் பாகம் (KGF 3) குறித்து இயக்குனர் பிரசாந்த் நீல் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் :

‘கேஜிஎஃப்’ திரைப்படம் இந்தியாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றி, அடுத்தடுத்த படங்கள் பான் இந்திய அளவில் உருவாக வழி வகுத்தது. அது மட்டுமின்றி யாஷ், பிரசாந்த் நீல் இருவரையும் இந்திய சினிமாவில் பிரபலமாக்கியது ‘கேஜிஎஃப்’ திரைப்படம். பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்தது. கன்னடத்தில் 2018 இல் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மாஃபியா ஜானரில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அதேபோல் 2022ல் வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. கேஜிஎஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்தது. பிரமாண்ட ஆக்‌ஷன் படத்தில் அம்மா, மகன் செண்டிமென்ட் காட்சிகளை வைத்து பிரசாந்த் நீல் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனால் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

‘கேஜிஎஃப்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குப் பிறகு, ‘சலார் பார்ட் 1’ படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் நீல் சொன்ன KGF 3 அப்டேட் :

இந்நிலையில் ‘KGF 3’ படம் குறித்து பிரசாந்த் நீல் பேசியது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் (KGF 3) கட்டாயமாக்கப்படும். கதையும் தயாராகிவிட்டது. படத்தை அறிவிக்கும் முன்பே அதற்கான கதையை தயார் செய்ய முடிவு செய்தோம். யாஷ் மிகவும் பொறுப்பான நடிகர். அவர் வியாபார நோக்கத்திற்காக எதையும் செய்பவர் அல்ல. நான் ‘KGF 3’ செய்வேனா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதில் யாஷ் கண்டிப்பாக இருப்பார் என்று ஒரு திருப்பத்துடன் பிரசாந்த் நீல் கூறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply