KH 233 Movie : KH 233 படத்திற்காக தயாராகும் கமல்ஹாசன்

KH 233 Movie :

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு தயாராகி வரும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். படம் வெளியான நேரத்தில் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனை வைத்து அவரே இயக்க தொடங்கினார். படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் உருவாகிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் உடன் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தியன் 2 திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் சில மாதங்களாக எஸ்.ஜே.சூர்யா முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. எனினும் இது தொடர்பில் நம்பக்கூடிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், KH233 படத்திற்காக (KH 233 Movie) கமல்ஹாசன் துப்பாக்கி சுடுவது போன்று தயாராகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ராஜ் கமல் பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply