KH 233 : எச்.வினோத் இயக்கும் கமல்ஹாசன் படத்தின் டைட்டில் வெளியீடு

கமல்ஹாசன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் KH 233 படத்தின் தலைப்பு தற்போது  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்தது. கமல்ஹாசன் எந்த படமும் செய்யாத சாதனையை இப்படம் படைத்தது. விக்ரம் திரைப்படத்தை வெற்றியைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் KH 233 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தியன் 2

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் துவங்கியது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ்.ஜெய், சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு படமான கல்கியில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடிக்கிறார்.

KH 233

சதுரங்க வேட்டை, தீரன், வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் அறிவிப்பு குறித்த காணொளியில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மகேந்திரனுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இப்படம் ராஜ்கமல் நிறுவனத்தின் 52வது படமும், கமல்ஹாசனின் 233வது படமும் ஆகும். இயக்குனர் எச்.வினோத் தனது அனைத்துப் படங்களையும் சமூகப் பின்னணியில் வைத்து தொடர்ந்து இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸான தலைப்பு

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை விட இந்த படம் தீவிர ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும், துப்பாக்கி சண்டைகள் நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு முன் நடிகர் கமல்ஹாசன் தன்னை தயார்படுத்த தீவிர படப்பிடிப்பு பயிற்சியில் இறங்கினார். ராஜ்கமல் நிறுவனம் இந்த பயிற்சி வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

தற்போது எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது. மேலும் படத்திற்கு மர்மயோகி என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே தனது படத்திற்கு ‘மர்மயோகி’ என்று பெயர் வைத்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டது. எனவே தற்போது உருவாகி வரும் கமலின் 233 (KH 233) படத்துக்கும் அதே தலைப்பை வைக்குமாறு கமலிடம் எச்.வினோத் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு கமல்ஹாசன் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply