KH234 Movie Update : நடிகர் கமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் நயன்தாரா

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். இதற்கிடையில் எச் வினோத்தின் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியாகி இன்டர்ஸ்ட்ரியல் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன், சிம்பு படங்களை தயாரிக்கவுள்ளார். நடிகராக தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் படத்தைத் தூசித்தட்டி, இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க காரணமாக இருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உற்சாகமாக பங்கேற்று வருகிறார்.

இதற்கிடையில், பிரபாஸிற்கு வில்லனாக கமல்ஹாசன் கமிட்டாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்காக கமல்ஹாசன் 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக கமல் 150 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் படங்களுக்குப் பிறகு, கமல்ஹாசன் தனது அடுத்த தயாரிப்பு மற்றும் நடிக்கும் படமான KH233 இல் எச் வினோத்துடன் இணையவுள்ளார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிக்கவுள்ள நிலையில், படத்துக்காக அவர் துப்பாக்கிப் பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் நடிக்க கமல்ஹாசன் கமிட்டாகியுள்ளார். 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு (KH234 Movie Update) நிலவுகிறது.

KH234 Movie Update - கமலுக்கு ஜோடியாக நயன்தாரா :

KH234 Movie Update : இந்தப் படத்தின் டீசர் அடுத்த மாதம் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்றும், இதன் படப்பிடிப்பில் கமல் நேற்று முதல் பிஸியாக இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக ரசிகர்களிடம் கமலே (KH234 Movie Update) தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய நயன்தாரா இதுவரை கமலுடன் நடிக்கவில்லை என்ற குறை இருந்தது.

இந்நிலையில் நயன்தாரா கமலுடன் KH234 படத்தில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை (KH234 Movie Update) அளித்துள்ளது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மற்றும் வித்யா பாலனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால் தற்போது இந்த படத்தில் நயன்தாரா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காம்பினேஷன் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Latest Slideshows

Leave a Reply