Khelo India Youth Games 2023 : பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி அழைப்பு

Khelo India Youth Games 2023 - அமைச்சர் உதயநிதி கேலோ போட்டிகள் நிகழ்வின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு :

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் (Khelo India Youth Games 2023) வரும் 19ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. 04/01/2024 இன்று தமிழ்நாடு விளையாட்டு அமைச்சர் உதயநிதி அந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிகழ்வின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க டெல்லி சென்றுள்ளார்.

கேலோ இந்தியா விளையாட்டு - ஓர் குறிப்பு :

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக போட்டிகள் நடத்தப்படாத நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவிலும், 2022 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஆனது 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வந்தன. தற்போது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் ஆனது நடைபெற உள்ளது.

Khelo India Youth Games 2023 : இந்த 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் 1000-க்கும் மேற்பட்ட நடுவர்கள், 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்  மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் (Khelo India Youth Games 2023) மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பமும் டெமோ போட்டியாக இடம் பெறுகிறது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை வெளியிட்டார். தமிழ்நாட்டின் ஒற்றுமை, விளையாட்டு திறன் மற்றும் தமிழ் உணர்வினை பகைசாற்றும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்வில் பங்கு பெற விதிமுறைகள் :

  1. பங்கு பெற விரும்பும் வீரர்/வீராங்கணைகள் அனைவரும் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.
  2. பங்கு பெற விரும்பும் வீரர்/வீராங்கணைகள் அனைவரும் கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை (or) பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 01.01.2023 அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி / கிராம பஞ்சாயத்துக்கள் மூலம் வழங்கப்பட்டது), பள்ளி சான்றிதழ்கள் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்.

3. தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படாது.

Latest Slideshows

Leave a Reply