Khelo India Youth Games 2024 Medal Tally : தமிழ்நாடு ஆனது கேலோ இந்தியா விளையாட்டு போட்டி பதக்கப் பட்டியலில் 3வது இடம்

Khelo India Youth Games 2024 Medal Tally - தமிழகம் 44 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது :

கடந்த 19/01/2024 ஆம் தேதி பிரதமர் மோடி 6-வது கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் தொடங்கி வைத்தார். இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆனது சென்னை, கோவை, மதுரை, மற்றும் திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனையர்கள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட்டில் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் (Khelo India Youth Games 2024 Medal Tally) பதக்க பட்டியலில்,

  • மகாராஷ்டிரா ஆனது 25 தங்கம், 21 சில்வர், 26 வெண்கலம் என 72 பதக்கங்களுடன் 1 வது இடத்தில் உள்ளது.
  • அரியானா ஆனது 18 தங்கம், 11 சில்வர், 27 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2 வது இடத்தில் உள்ளது.
  • தமிழகம் ஆனது 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் 3 வது இடத்தில் உள்ளது.
  • பஞ்சாப்  ஆனது 22 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.
  • டெல்லி ஆனது 23 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது.
  • மணிப்பூர் 22 பதக்கங்களுடன் 6 வது இடத்தில் உள்ளது.

போட்டியின் 5-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகளின் வெற்றிப் பட்டியல் :

டிராக் சைக்கிள் பந்தயம் : தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.பி.தன்யதா மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் பந்தயத்தில் மகளிருக்கான 2 கிலோ மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை ஜே.பி.தன்யதா 2:52.333 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மகாராஷ்டிராவின் ஷியா லால்வானி (2:54.530) வெள்ளிப் பதக்கமும் மற்றும் ராஜஸ்தானின் கார்கி பிஷ்னோய் (2:56.396) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான ஸ்பிரின்ட் ஜூனியர் பந்தயம் : ராஜஸ்தானின் விம்லா மச்ரா மகளிருக்கான ஸ்பிரின்ட் ஜூனியர் பிரிவில் (0:14.099) தங்கப் பதக்கமும், தமிழகதின் மதி (0:14.271) வெள்ளிப் பதக்கமும், மற்றும் மணிப்பூரின் ஹெய்ஸ்னம் பிரமிகா சானு (0:14.267) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான ஸ்கிராட்ச் பந்தயம் : தமிழகத்தின் ஆர்.தமிழரசி மகளிருக்கான ஸ்கிராட்ச் பிரிவில்  (10:10.625) தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் ஷியா லால்வானி (10:10.713) வெள்ளிப் பதக்கமும் மற்றும் தமிழகத்தின் தன்யதா (10:10,758) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான ஸ்குவாஷ் பந்தயம் : தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி சென்னை சேத்துப்பட்டில் உள்ள நேரு பார்க் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்ற மகளிருக்கான இறுதிப்போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வீராங்கனை நிருபமா துபேவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடியோகா பந்தயம் : தமிழகத்தின் பி.மோனிஷ் மஹேந்திரன், எஸ்.கபிலன் ஆகியோர் ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடியோகாவில் 131.98 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். மகாராஷ்டிராவின் பிரணவ் சாஹு, யாஷ் கிரண் லகாட்ஜோடி 133.23 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் மற்றும் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் பிபிஷன் கரட், தன்மே சந்தீப் மஹலஸ்கர் ஜோ 132.42 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடி பந்தயம் : தமிழகத்தின் மேனகா, பெட்ராஷிவானி ஜோடி மகளிருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடிபிரிவில் 132.35 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. மகாராஷ்டிரா ஜோடி 132.22 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் மற்றும் மத்தியபிரதேச ஜோடி 132.07 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பந்தயம் : தமிழகத்தின் வீராஜ் கிரீஷ்ராம்தாஸ், வைஷ்ணவி கிரீஷ் ராம்தாஸ் ஜோடி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஹரியானா ஜோடி தங்கமும் மற்றும் ராஜஸ்தான் அணி வெள்ளியும் வென்றன.

ஆடவருக்கான 81 கிலோ எடைப் பந்தயம் : தமிழகத்தின் ஹேமந்த் சச்சின் ஜூடோவில் ஆடவருக்கான 81 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

தடகளத்தில் ஆடவருக்கான போல்வால்ட்டில் பந்தயம் : தமிழக வீரர் கவின் ராஜா தடகளத்தில் ஆடவருக்கான போல்வால்ட்டில் 4.30 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். உத்தர பிரதேசத்தின் ஆர்ய தேவ் 4.40 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கமும் மற்றும் மத்திய பிரதேசத்தின் அமன் சிங் 4.40 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் பந்தயம் : தமிழகத்தின் விஷ்ணு ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 13.77 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் சந்தீப் கோந்த் (13.89) வெள்ளிப் பதக்கமும் மற்றும் கேரளாவின் கிரண் (14.14) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

Latest Slideshows

Leave a Reply