Kick Movie Release Date : சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

Kick Movie Release Date :

தொடர்ந்து நகைச்சுவை விருந்தளித்து வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘கிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் நட்சத்திர நகைச்சுவை நடிகராக கலக்கிய நடிகர் சந்தானம், தற்போது நகைச்சுவை சார்ந்த படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தனது புதிய பயணத்தை தொடங்கிய சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனு, சபாபதி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்த வரிசையில் கடைசியாக சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகும். டிடி ரிட்டர்ன்ஸ் ஒரு பக்கா திகில் காமெடி விருந்தாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது. டிடி ரிட்டர்ன்ஸ் என்பது சந்தானத்தின் முந்தைய ஹாரர்-காமெடி படங்களான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியவற்றின் தொடர்ச்சியாகும். இது ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்கபட்டி ராமசாமி படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக வைத்து தயாராகி வரும் நகைச்சுவை படமான வடக்கபட்டி ராமசாமி படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் சந்தானம் நடிக்கும் அடுத்த காமெடி ட்ரீடாக உருவாகிவரும் திரைப்படம் தான் ‘கிக்’ ஆகும். பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்குகிறார். கிக் படத்தில் சந்தானம், தம்பி ராமையா, ராகினி திவேதி, கோவை சரளா, பிரம்மானந்தம் மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஒரு விறுவிறுப்பான நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கிக் படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், தற்போது கிக் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Kick Movie Release Date : சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியால், சந்தானத்தின் அடுத்த படங்களுக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ‘கிக்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சந்தானத்தின் ‘கிக்’ திரைப்படம் (Kick Movie Release Date) செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply