Kick Movie Review : கிக் திரைப்படத்தின் விமர்சனம்...

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில், சந்தானம் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிக் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படம் எப்படி இருக்கிறது, ரசிகர்களை கவர்ந்ததா என்று பார்க்கலாம்.

படத்தின் மையக்கருத்து :

மனோபாலாவும் தம்பி ராமையாவும் விளம்பரம் எடுக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். நடிகை தன்யா ஹோப் (ஷிவானி) மனோபாலாவிடம் பணிபுரிகிறார். நடிகர் சந்தானம் (சந்தோஷ்) தம்பி ராமையாவிடம் வேலை செய்கிறார். எந்த கொள்கையும், நெறிமுறையும் இல்லாமல் தனது நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட சந்தானம், தங்கள் விளம்பர நிறுவனத்தின் திறமையான மற்றும் நேர்மையான கதாநாயகியான தன்யா ஹோப்பைப் பார்த்த நொடியில் காதலிக்கிறார். ஆனால் தான்யா ஹோப் சந்தானத்தை போலியாக வேலை செய்து அவர்களின் ஆர்டரை பறித்ததை கண்டு கொள்ளாமல் வெறுத்து சந்தானம் மீது விளம்பர பிலிம் கவுன்சில் புகார் அளிக்கிறார்.

ஒவ்வொரு முறையும் இந்தப் புகார்களில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளும் சந்தானம், தன்யாவை வேறு பெயரைச் சொல்லி பழகி தன்னுடன் காதல் பட வைக்கிறார். தன்யாவை நிஜமாகவே காதலிக்கத் தொடங்கும் சந்தானம், ஒரு கட்டத்தில் உண்மையைச் சொல்ல முயலும் போது, ​​தான்யா தன்னை ஏமாற்றுகிறாள் என்று அறிந்து மனம் உடைந்து போகிறார். தொழில் போட்டிக்கு இடையே இவர்களின் காதல் என்ன ஆனது, அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

Kick Movie Review :

‘ஹீரோ’ சந்தானம் வழக்கம் போல் தனது டிரேட்மார்க் பாடி லாங்குவேஜ், டைமிங் காமெடி என தன் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். முதலில் தெளிவான கதாநாயகியாக கவனமாக என்ட்ரி கொடுக்கும் தன்யா ஹோப், கதையின் போக்கில் ஒரு மக்கு நாயகியாக மாறி நம்மை கஷ்டப்படுத்துகிறார். நகைச்சுவை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், செந்தில், வையாபுரி என எண்ணற்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் அதில் பாதி பேர் நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பேற்றுகிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசமான நகைச்சுவைகளைத் தூவி எரிச்சலூட்டுவதற்கும் பாதி நேரம் தம்பி ராமையா பயன்படுத்தப்படுகிறார்.

Kick Movie Review : படம் முழுக்க பொய், ஏமாற்று, போலி என்று ஹீரோவாக வரும் சந்தானம், “விளம்பரத்தை விளம்பரப்படுத்த எத்தனை பொய்கள் சொல்கிறோம், அதுபோல காதலை ப்ரமோட் பண்ண எத்தனை பொய் சொன்னேன்” என்று சீரியஸான வசனம் பேசுவது முரண். இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவின் இசை படத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது. “டிடி ரிட்டர்ன்ஸுடன் இந்தப் படத்தை ஒப்பிடாதீர்கள், கிக் வித்தியாசமாக இருக்கும், சந்தானம் படம் என்று சொல்லாமல் இயக்குநர் பிரசாந்த்ராஜ் படம் என்றே சொல்ல வேண்டும்” என்ற விமர்சனத்தில் (Kick Movie Review) இருந்து சந்தானம் ஏற்கெனவே தப்பிவிட்டார்.

Latest Slideshows

Leave a Reply