Kick Movie Teaser : சந்தானத்தின் 'கிக்' டீசர் வெளியீடு...

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து சினிமா உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக ஜொலித்த சந்தானம் தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். சந்தானத்தின் கடைசிப் படமான குலு குலு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை எஸ்.கே.ஆனந்த் இயக்க, ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்த நிலையில், ​​இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தானம் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் நல்ல நகைச்சுவை படமாக அமைந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

Kick Movie Teaser : நடிகர் சந்தானம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது அதே ஜானரில் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது. ஃபார்ட்யூன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் லால் குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்சு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹாப் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த பாசத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் (Kick Movie Teaser) வெளியாகியுள்ளது.

Kick Movie Teaser :

முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம் கவனத்தை ஈர்க்கிறது. நடிகர் சந்தானத்தின் திரை ஆளுமை அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது. டீசரின் காட்சிகளும் வசனங்களும் படம் காதல் + காமெடியாக (Kick Movie Teaser) உருவாகியிருப்பதை பிரதிபலிக்கிறது. இருப்பினும், முழு டீசரில் ஈர்க்கும் நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதைக்கு வழிவகுக்காததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply