Kilambakkam Bus Stand Latest Update : கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் தொடர்பாக வெளியிடபட்ட முக்கிய தகவல்கள்

Kilambakkam Bus Stand Latest Update :

  • சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தையொட்டி, GST சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார். அத்துடன், இதுகுறித்து பல முக்கிய தகவல்களையும் (Kilambakkam Bus Stand Latest Update) பகிர்ந்துள்ளார்.
  • இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடி நீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
  • கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் (Kilambakkam Bus Stand Latest Update), சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தும் பணி, புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி போன்ற பணிகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருப்பதால்,  புதிய பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.
  • அமைச்சர் சேகர்பாபு கிளாம்பாக்கம் புதிய பேருந்து  நிலையத்தையொட்டி, GST சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் நேரடி ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
  • அமைச்சர் சேகர்பாபு 27/09/2023 அன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கிளாம்பாக்கத்துக்கு சென்று ஆய்வு செய்தார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் காவல் ஆணையர் (போக்குவரத்து) என்.குமார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங் மற்றும் சில நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் இந்த ஆய்வுகளின்போது உடனிருந்தனர்.

ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார் :

Kilambakkam Bus Stand Latest Update :

  • கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவேறும் நிலையில் உள்ளது.
  • மழைநீர்கால்வாய் பணி மற்றும் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி போன்ற பணிகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருப்பதால்,  புதிய பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.
  • இந்த மழைநீர் வடிகால் பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் அளவுக்கு போர்க்கால அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன.
  • இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும், அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
  • அதேபோல, நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப் பணிகளான அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கம், போலீஸ் அகாடமி சாலை-கூடுவாஞ்சேரி-ஊனமஞ்சேரி சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-மண்ணிவாக்கம்-ஆதனூர் சாலை ஆகிய பணிகள் ரூ.16.61 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
  • ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் பேருந்து முனையத்தில் முகப்பு வளைவு அமைக்கும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும்.
  • ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் பேருந்து முனையத்தில் காவல் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவுள்ளன.
  • ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணி ரூ.29 கோடி மதிப்பீட்டில் முடிச்சூர் சென்னை வெளிவட்ட சாலையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
  • புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும்.

Latest Slideshows

Leave a Reply