Kilambakkam Bus Stand Opening : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து (Kilambakkam Bus Stand Opening) வைத்தார். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணிக்க வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த 12ம் தேதி துவங்கிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி (Kilambakkam Bus Stand Opening) வைத்தார். இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Kilambakkam Bus Stand Opening :

சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து (Kilambakkam Bus Stand Opening) வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள கலைஞரின் சிலையை திறந்து வைத்த அவர், பேட்டரி வாகனத்தில் பேருந்து நிலையத்தை சுற்றிப் பார்த்தார். இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநகரப் போக்குவரத்து பேருந்துகள் என 10 பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, ​​பேருந்தில் பயணம் செய்த பயணிகள், தமிழக முதல்வருக்கு டாடா காட்டியபடி உற்சாகமாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, கடந்த ஆட்சியில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக, 30 சதவீத பணிகள் மட்டுமே முடிந்தன. இந்த ஆட்சியில், 70 சதவீத பணிகள் நிறைவடைந்தன. சிறிது மழை பெய்தாலே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அதனை 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டது. எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு முழு சாலை அமைக்கப்பட்டது. ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.11 கோடியில் அழகிய பூங்காவும், 16 ஏக்கர் நிலப்பரப்பில் 13 கோடியில் காலநிலை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் முழுமையாக செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் பயணிப்பார்கள். ரூ.140 கோடி மதிப்பீட்டில் ஸ்கைவாக் பணிகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் :

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம் மற்றும் முதல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் 3,500 நகரப் பேருந்துகள் வந்து செல்ல  மேற்கூறைகளுடன் நடைமேடைகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. 130 அரசுப் பேருந்துகளும், 85 தனியார் பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தப்படலாம். 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. QR குறியீடு மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 2 அடித்தளத்தில் 340 கார்கள் மற்றும் 2,800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள், ஏடிஎம் மையங்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை உள்ளன. தனி காவல் நிலையமும் அமைக்கப்படுகிறது. முக்கியமாக புயல் வெள்ளத்தின் போது மழை நீர் தேங்காதவாறு வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply