Kilambakkam New Bus Stand Latest News : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆனது முழு வீச்சில் இயங்கும்
சென்னையில் இந்த 2024-ஆம் நடப்பாண்டில் கூடுதல் சிறப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போதைய வரும் பொங்கல் பண்டிகை சூழலில் பேருந்துகளின் பங்கு (Kilambakkam New Bus Stand Latest News) முக்கியமானதாக உள்ளது. எனவே வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர், மாதவரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து தமிழ் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. ஆனால் பொங்கல் பண்டிகை விடுமுறை ஆனது 14ஆம் தேதி சனிக்கிழமை அன்றே தொடங்கி விடுகிறது. எனவே மக்கள் ஜனவரி 13 வெள்ளி முதலே வெளியூர் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவர். ஒரு சிலர் ஒருநாள் விடுப்பு எடுத்து கொண்டு தங்கள் பயணங்களை முன்கூட்டியே தொடங்கி விடுவர். இதனால் வரும் ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் ஆனது அலைமோதும்.
பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது :
தமிழ் நாட்டில் பொங்கல் திருவிழா ஆனது 15, 16, 17 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. எனவே எந்தெந்த நாட்களில் பொங்கல் சமயத்தில் அதிகமாக பொதுமக்கள் பயணம் மேற்கொள்வர் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு ஆனது அறிவித்துள்ளது.
மொத்தம் 6,300 சிறப்பு பேருந்துகள் மூன்று நாள்களில் இயக்கப்படும். 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 4,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மொத்தமாக 11,006 பேருந்துகள் இதன்மூலம் இயக்கப்படும். 8,478 சிறப்பு பேருந்துகள் ஆனது தமிழ் மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து இயக்கப்படும். மேலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்ப திட்டமிடுவர். எனவே மீண்டும் திரும்பவும் இதே எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
Kilambakkam New Bus Stand Latest News - கிளாம்பாக்கம் ஸ்பெஷல் :
வரும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆனது முழு வீச்சில் இயங்க தொடங்கிவிடும் (Kilambakkam New Bus Stand Latest News) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தான் செல்ல வேண்டியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிகளவில் வருவார்கள்.
எனவே, பொதுமக்கள் எளிதில் செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செயல்படுத்த வேண்டும் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி மற்றும் பேருந்து செல்லும் இடங்கள் குறித்த தகவல்களை தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். 30 தன்னார்வலர்கள் பொங்கல் திருவிழாவையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பண்டிகை வரை எஸ்இடிசி அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய 6 போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். இந்த நிலை பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து பகுதிகளுக்கும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படும்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்