Kilambakkam Railway Station Is Operational Soon : கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் இயக்கம்

Kilambakkam Railway Station Is Operational Soon :

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் தற்போது ரயில் நிலையம் இல்லாவிட்டாலும் கூட வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று சென்னை மாநகருக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்கின்றனர். பயணிகள் போதிய எண்ணிக்கையில் ரயில் சேவை இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பயணிகளின் சிரமத்தை சரிசெய்தால் தான் கிளாம்பாக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (Kilambakkam Railway Station Is Operational Soon) ஆனது அதன் முழுப்பயனை பெறும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் திட்டம் :

கிளாம்பாக்கத்தில் தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசிற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் (Kilambakkam Railway Station Is Operational Soon) அமைக்க திட்டமிடப்பட்டது. KCBT ரயில் நிலைய பணிகளை விரைவில் முடிக்கும் வகையில் ரூ.20 கோடியை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் விரிவுபடுத்தப்பட்டன.

GST சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை எளிதில் கடக்கும் வகையிலான Skywalk அமைக்கும் பணிகள் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதற்கு கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வண்டலூர் – கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத்தின் சமீபத்திய அறிக்கை :

  • கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையப் பணிகள் 10 சதவீதம் முடிவடைந்துள்ளன.
  • தற்போது ஒரே ஒரு பிளாட்பார்ம் மட்டும் 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் வகையில் கட்டி முடித்து உடனடியாக செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
  • அந்த ஒரு பிளாட்பாரத்தின் இருபுறமும் ரயில்கள் நின்று செல்லும் வகையில் அமைக்கப்படும். இதனால் செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில்களும் மற்றும் தாம்பரம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களும் இந்த ஒரு பிளாட்பாரத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இதன் தொடர்ச்சியாக டிக்கெட் கவுன்ட்டர், ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கை வசதி என பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. சிறுசிறு கடைகளை ரயில்வே நடைமேடைகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை கட்டும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன
  • சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கூடுதலாக பயணிகள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார் போல் 30% வரை, கூடுதல் மின்சார ரயில்களை, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    குறிப்பாக ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகளின் சமீபத்திய அறிக்கை :

  • சில வாரங்களுக்கு முன்பு தான் GST சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை எளிதில் கடக்கும் வகையிலான Skywalk அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • இது ஜனவரி 2025ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த Skywalk ஆனது பயணிகள் சாலையை எளிதில் கடக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும். சாலையின் குறுக்கே பயணிகள் நடந்து செல்ல வேண்டியது இல்லை.  

இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் எப்படி அதிகப்படியான ரயில்கள் இயக்கப்படுகிறதோ, அதுபோன்ற தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் மற்றும் சேவையை அளிக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply