Kilambakkam Skywalk : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆகாய நடைமேம்பாலம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை 400 மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட நடைபாதை ரூ.79 கோடி மதிப்பீட்டில் (Kilambakkam Skywalk) அமைக்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்களுக்காக பிரத்யேக பேருந்து நிலையமாக சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் (Kilambakkam Skywalk) செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரயில் நிலையம் இல்லாதது கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தெற்கு ரயில்வேயின் உதவியுடன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளில் 80% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட வேண்டிய ரயில் நிலையம், பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக தாமதமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kilambakkam Skywalk - Platform Tamil

உயர்மட்ட நடைபாதை (Kilambakkam Skywalk)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் உயர்மட்ட நடைமேடை (ஸ்கைவாக்) கட்டுமானப் பணிகள் (Kilambakkam Skywalk) நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதி வரை 400 மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட நடைமேடை கட்டப்பட உள்ளது. நகரும் படிக்கட்டு மற்றும் மின் தூக்கி ஆகியவற்றுடன் கூடிய நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை உயர்த்தப்பட்ட நடைபாதை ரூ.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், கிளாம்பாக்கம் மேம்பாலம் கட்டுவதற்காக 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. மேம்பாலம் பணி கட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.  இந்நிலையில், கையகப்படுத்த வேண்டிய நிலத்தில் நடக்கவேண்டிய பணிகளைத் தவிர்த்து, மற்ற இடங்களில் நடைபாதை மேம்பாலம் (Kilambakkam Skywalk) அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, நடைபாதை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply