King Kohli : சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய கிங் கோலி...

உலக கோப்பை கிரிக்கெட் :

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி (King Kohli) கூடுதலாக 45 நிமிடம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத் இன்று தொடங்கியது. முதல் போட்டியில், கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்துள்ளனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டும் கேப்டன் சந்திப்பில் பங்கேற்க அகமதாபாத் சென்றார். அவரும் இன்று இந்திய அணியில் இணைந்தார். இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் நேற்று முதல் பயிற்சியை தொடங்கினர்.

King Kohli :

முதல் நாளிலேயே இந்திய அணியின் வீரர்கள் பலர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக விராட் கோலி (King Kohli) திட்டமிட்டதை விட 45 நிமிடங்கள் கூடுதலாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரில் விராட் கோலி (King Kohli) உச்சகட்ட பார்மில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெட் பயிற்சியில் கூடுதல் நேரம் செலவழிக்கப்படுவது பயிற்சி ஆட்டங்கள் இல்லாததால் தான். இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான இந்தியாவின் பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இறங்கிய முதல் நாளிலேயே இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் மன்னன், ஆனால் உலக கோப்பை தொடரில் சொல்லும் படியாக எதையும் செய்யவில்லை. இவ்வளவு ஏன், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சேஸிங் செய்யும் போது சேஸ் மாஸ்டர் விராட் கோலி (King Kohli) இதுவரை அரை சதம் அடித்ததில்லை. அந்த மோசமான சாதனைக்கு விராட் கோலி விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply