King Of Kotha Movie Review : 'கிங் ஆஃப் கோதா' படத்தின் திரை விமர்சனம்...

மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த சில வருடங்களில் வெளிவந்த ஹே சினாமிகா, சல்யூட், சீதாராமம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. திரைப்படங்கள் மட்டுமின்றி, துல்கர் சல்மான் நடித்த ஃபேமிலி மேன் மற்றும் ஃபார்ஸி வெப் சீரிஸும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அடுத்து டி.கே. இயக்கிய கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் தொடரும் கடந்த 18 ஆம் தேதி OTT தலத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் வெளியாகியுள்ளது. 1980களின் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘கிங் ஆஃப் கோதாவில்’ துல்கர் சல்மான் ராஜு என்கிற ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, செம்பன் வினோத் ஜோஸ், சரண் சக்தி, அனிகா சுரேந்திரன், சாந்தி கிருஷ்ணா, ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி படத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

மையக் கருத்து :

ரவுடிகள் அராஜகம் தலைவிரித்தாடும் கொத்தை என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் கண்டிப்பான காவல்துறை அதிகாரியான ஷாகுல் (பிரசன்னா). அனைத்து அதிகாரங்களுடனும் குழுவை உருவாக்கினாலும் கண்ணன் பாயை (ஷபீர்) அகற்ற முயற்சிக்கும் ஷாகுலை கண்ணன் பாய் அவமானப்படுத்துகிறார். அவரைப் பழிவாங்க முற்படும் ஷாகுல், கோதையின் முன்னாள் தாதாவும், கண்ணன் பாயின் முன்னாள் சிறந்த நண்பருமான ராஜு (துல்கர் சல்மான்) பற்றி அறிந்து கொள்கிறார்.

கண்ணன் பாய் மற்றும் அவனது கும்பலான கே-டீம் அழிக்க, ஷாகுல் பல ஆண்டுகளாக முன்னாள் கொத்தையை விட்டு வெளியேறிய ராஜுவை கண்டுபிடித்து ராஜூவை கொத்தைக்கு வரவைக்கிறார். கண்ணன் பாயே அஞ்சும் ராஜு யார், இரண்டு நண்பர்களின் கதை என்ன, ராஜு ஏன் கொத்தைக்கு விட்டு வெளியேறினார், ராஜுவின் வருகை கண்ணன் பாய் மற்றும் கொத்தையை எப்படி மாற்றியது என்பதைப் பற்றி பேசுகிறது கிங் ஆஃப் கோதா.

King Of Kotha Movie Review :

கேங்ஸ்டர் கேரக்டரில் துல்கர் சல்மானின் மாஸ் அவதாரத்தில் மிரட்டுகிறது. படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாக நடித்துள்ளனர். காட்சிகளும் பின்னணி இசையும் படத்திற்கு பலம். இந்த படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும், படம் முழுக்க பக்கா மாஸாக இருப்பதாகவும் மற்றொரு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தான் பார்த்த சிறந்த படம் ‘கிங் ஆஃப் கோதா’ என்று ட்வீட் செய்து வருகின்றனர். துல்கர் சல்மான் நடிப்பில் படம் மிரட்டலாக உருவாகியுள்ளது.

King Of Kotha Movie Review : சமீபத்தில் வெளியான சிறந்த பக்கா கமர்ஷியல் படமாக ‘கிங் ஆஃப் கோதா’ தனித்து நிற்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள், பிஜிஎம், க்ளைமாக்ஸ் என அனைத்தும் செம்ம மாஸ் என்று கூறி வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் இருக்கு என கூறி வருகின்றனர். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், படத்தை பிளாக்பஸ்டர் என்று நெட்டிசன் விமர்சனம் செய்துள்ளனர். துல்கர் சல்மானின் நடிப்பு வேறு லெவல் என்றும், மலையாளத்தில் ஒரு புதிய மாஸ் ஹீரோ உருவாகியிருப்பதாகவும் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக, துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ கலவையான விமர்சனங்களைப் (King Of Kotha Movie Review) பெற்றுள்ளது. வரும் நாட்களில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply