King Of Kotha Second Single : கிங் ஆஃப் கோதா இரண்டாவது சிங்கிள்...

King Of Kotha Second Single :

துல்கர் சல்மான் நடித்து வரும் கிங் ஆஃப் கோதா இரண்டாவது சிங்கிள் (King Of Kotha Second Single) வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் நடிகராக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகர் துல்கர் சல்மான் கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கலாட்டா குழு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தது. நடிகர் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் பரிசாக, அவர் நடித்து வரும் அதிரடி கேங்ஸ்டர் படமான கிங் ஆஃப் கோதா படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்காரன்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா, தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப்-ரிவெஞ் ஆப் தி ஆர்ட்டிஸ்ட், மலையாலத்தில் சல்யூட் வரிசையாக நான்கு வெவ்வேறு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. முதல் முறையாக திரைப்படங்களையும் தாண்டி வெப் சீரிஸில் களமிறங்கிய துல்கர் சல்மான், ஃபேமிலி மேன் & ஃபார்சி வெப் சீரிஸ்களின் இயக்குநர்களான ராஜ் மற்றும் டி.கே.கன்ஸ் மற்றும் குலாப்ஸ் வெப் சீரிஸில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் தயாராகி வரும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு விரைவில் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும். அடுத்ததாக தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியின் லக்கி பாஸ்கர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில், துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படம் கிங் ஆஃப் கோதா. அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷியின் கதையில் துல்கர் சல்மானுடன் இணைந்து சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கிங் ஆஃப் கோதாவில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்டு உருவாகி வருகிறது.

King Of Kotha Second Single : இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘என் உயிரே’ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலையாளப் பதிப்பின் வரிகளை மனு மஞ்சித் எழுதியுள்ளார், அதே சமயம் ஸ்ரீஜிஷ் சுப்ரமணியன் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்பான என் உயிரே, மணி அமுதவனின் வரிகள் மற்றும் பாடலை சத்யபிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி (King Of Kotha Second Single) வருகிறது. வேர்ஃபரர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த கிங் ஆஃப் கோதா திரைப்படம் யு/ஏ சான்றிதழ் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply