KL Rahul T20 Match : கே எல் ராகுல் தேர்வு செய்யப்படாதது ஏன்?

KL Rahul T20 Match :

14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மீண்டும் இடம்பிடித்துள்ள நிலையில், மூத்த வீரர் கே.எல்.ராகுலை (KL Rahul T20 Match) மட்டும் புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கு முன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் காயம் காரணமாக விலகியதால், இந்திய அணியின் கேப்டனாக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கிடையில், உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர். இருவரும் மீண்டும் டி20 அணியில் விளையாட விரும்பினர். இதனால் சீனியர் வீரர்கள் இருவரும் இந்திய அணிக்கு மறுபிரவேசம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை.

இவர்களுடன் கே.எல்.ராகுலும் டி20 (KL Rahul T20 Match) கிரிக்கெட்டில் விளையாடவில்லை. கே.எல்.ராகுல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டர் வீரராக கே.எல்.ராகுல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், இந்திய டி20 அணியில் கே.எல்.ராகுலை (KL Rahul T20 Match) மட்டும் தவிர்த்துவிட்டு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை பிசிசிஐ சேர்த்துள்ளது. இது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரின் புதிய அவதாரத்தில் கேஎல் ராகுல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply