KL Rahul vs Shreyas Iyer : இருவரில் யார் உலகக் கோப்பை விளையாடப் போவது?

KL Rahul vs Shreyas Iyer :

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுலுக்கும், ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இடையே (KL Rahul vs Shreyas Iyer) போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் இளம் வீரர் இஷான் கிஷான். கே.எல் ராகுலுக்கு பதிலாக அவர் அணியில் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் இடத்தை பிடிக்கும் வீரராக மாறியுள்ளார்.

ராகுல் காயம் :

அணியில் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், சில மாதங்களுக்கு முன் காயம் காரணமாக வெளியேறியதால், இஷான் கிஷானுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. காயத்தில் இருந்து மீண்டு தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட ராகுல் தயாராகி விட்டார்.

ஷ்ரேயாஸ் ஐயர் வருகை :

இதற்கிடையில், மற்றொரு மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் இருந்து மீண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறார். இதுவரை, ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால், அதில் அதிக ரன்கள் எடுக்கவில்லை.

இஷான் கிஷானின் அபார ஆட்டம் :

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய இஷான் கிஷான் 81 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். மேலும், அசத்தி தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

இந்நிலையில் இஷான் கிஷான் நல்ல பார்மில் இருப்பதால் அவரை அணியில் இருந்து நீக்கக்கூடாது என முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். உலக கோப்பை தொடரிலும் அவரை விளையாட வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply