Kohli Weakness : விராட் கோலியின் வீக்னஸ் - ஸ்ட்ரைக் ரேட் குறித்து கலாய்த்த பாகிஸ்தான் வீரர்..!

விராட் கோலி (Kohli weakness)

2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜுனைத் கான் சமூக வலைதளங்களில் (Kohli weakness) கிண்டலாக பதிவிட்டுள்ளார். 2024 ஐபிஎல் தொடருக்குப் பிறகு 2024 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதால் அந்த தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்படக்கூடாது என்று சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். அவரது எட்டாவது ஐபிஎல் சதத்தை பலர் பாராட்டினாலும், சிலர் ஐபிஎல் வரலாற்றில் இது மிகவும் மெதுவான சதம் என்று கூட விமர்சித்துள்ளனர். ஜுனைத் கானும் அதை சுட்டிக்காட்டி விராட் கோலியை கிண்டல் செய்தார். அப்போது அவர், “ஐபிஎல் தொடரில் மிக மெதுவாக சதம் அடித்ததற்கு வாழ்த்துகள்” என்றார்.

ஜுனைத் கான் :

அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் சில பந்துகளில் ஆடுகளத்தை கணிக்க முயன்றார். ஆனால், அவரால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. இந்த நிலையில், அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 33.33 ஆக இருந்தது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது ஜுனைத் கான் வெளியிட்ட பதிவில் “ஸ்டிரைக் ரேட் 33.33” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் மோசமான ஸ்டிரைக் ரேட்டை கிண்டல் செய்து வருகிறார்.

விராட் கோலியை ஜுனைத் கான் விமர்சித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஜுனைத் கான் மற்றும் விராட் கோலி மோதல் கிரிக்கெட் உலகில் சுவாரசியமான ஒன்று. இருவரும் மூன்று போட்டிகளில் சந்தித்துள்ளனர். அந்த மூன்று போட்டிகளில், ஜுனைத் கான் 24 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விராட் கோலியின் விக்கெட்டை மூன்று முறை கைப்பற்றினார். அதன்பிறகு உலகின் முன்னணி பேட்ஸ்மேன் என்று பெயர் பெற்ற விராட் கோலியை ஜுனைத் கான் அவ்வப்போது கிண்டல் செய்து வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply