Kolai Movie Release Date: ஜூலை 21-ல் வெளியாகிறது விஜய் ஆண்டனியின் 'கொலை'

‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கொலை படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி இசைமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பல பன்முக தன்மை கொண்டவர் ஆவார். சமீபத்தில் அவர் நடித்து இயக்கிய பிச்சைக்காரன் 2 திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பையும் வசூலையும் இவருக்கு பெற்றுத் தந்தது. இந்நிலையில் அவர் தனது அடுத்த படமான ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி இசைமணிப்பாளராக அறிமுகமாகி பல ஹிட்டான பாடல்களை கொடுத்தார். தொடர்ந்து இவர் ஹீரோவாகி ரசிகர்களை கவர்ந்தார். இவரது ஆரம்பகால படங்களான நான், சலீம் போன்ற படங்கள் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து கமர்ஷியல் ஹீரோவாக தன்னை காட்டிக்கொண்டு பல படங்களில் நடித்து வருகிறார். இன்று தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் ஹீரோக்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகத்தில் அம்மா சென்டிமென்ட் நன்றாகவே பயன்படுத்தப்பட்டது. ஒரு மனிதன் தன் தாய்க்காக ஒரு மண்டலம் பிச்சைக்காரனாக மாற முடியுமா என்று இந்த படம் யோசிக்க வைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சசியே இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறொரு படத்தில் பிசியாக இருந்ததால், வேறு சில இயக்குனர்களிடம் கேட்டு அதுவும் பலனளிக்கவில்லை, ஆனால் தற்போது தானே படத்தை இயக்கி ஹிட் அடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் அண்ணன்-தங்கை சென்டிமென்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கொலை வழக்கை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரித்திகா சிங், மிஷ்கின், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி துப்பறியும் டிடெக்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார்.

Kolai Movie Release Date

முன்னதாக கொலை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது படம் ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த க்ரைம் த்ரில்லர் படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதை நிஜமாக்கும் வகையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

Latest Slideshows

Leave a Reply