Kottukkaali Release Date : சூரியின் கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (Kottukkaali Release Date) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கொட்டுக்காளி :

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் சூரி. ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சிம்பு போன்ற பிரபலங்களுடன் நகைச்சுவை நடிகராக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சூரி. பிரபல இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். விடுதலை படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான கருடன் படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. விடுதலை படத்தின் போதே அவர் கொட்டுக்காளி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புதல் ஆனார். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய இப்படம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும்? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது.

Kottukkaali Release Date :

சூரி கதாநாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு (Kottukkaali Release Date) அறிவித்துள்ளது. கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரி வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சூரியுடன் நடிகை அன்னா பென், ஜவஹர் சக்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விடுதலை படத்திற்கு பிறகு கனமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் சூரி, கொட்டுக்காளி படத்திலும் மிகவும் கனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொட்டுக்காளி படத்தின் மூலம் சூரிக்கு வெற்றி கிடைத்தால் இனிவரும் காலங்களில் அவரைத் தொடர்ந்து கதாநாயகனாகவே திரையில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply