KP Ramasamy Rank 100th In Forbes List : இந்தியாவின் 100 பணக்காரர்களின் Forbes List-ல் 100வது இடத்தைப் பிடித்த KP.ராமசாமி

KP Ramasamy Rank 100th In Forbes List :

ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யும் KPR மில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் KP ராமசாமி Rs.19,133.7 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் 100 பணக்காரர்களின் Forbes பட்டியலில் 100வது (KP Ramasamy Rank 100th In Forbes List) இடத்தைப் பிடித்துள்ளார். Forbes வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில், 

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்) –  No 1
  • அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி (68 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்) – No 2
  • HCL நிறுவனர் ஷிவ் நாடார் (29.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்)  – No 3 இடத்தில் உள்ளனர்.

KPR மில் ஆனது பின்னப்பட்ட ஆடைகள், பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல் தயாரிப்பிலும், சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியிலும் நல்ல நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். 74 வயதான KP ராமசாமி ஈரோடு மாவட்டம், கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய கே.பி.ராமசாமி, இந்தியாவின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி வணிகம் ஒன்றை நிறுவி அதில் வெற்றி பெற்றுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ராமசாமி மற்றும் அவரது சகோதரர்களால் 1984ல் நிறுவப்பட்ட KPR மில் ஆனது ஆரம்பத்தில், சலவை, சாயமிடுதல், அச்சிடுதல் மற்றும் எம்பிராய்டரி போன்றவற்றை அவுட்சோர்ஸ் செய்து படிப்படியாக முன்னேற்றம் கண்டது.

இந்த KPR மில் 2010 ஆம் ஆண்டளவில் நூல் மற்றும் துணி தயாரிப்பாளராக உருவாகி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிடுகிறது. கே.பி.ராமசாமி 2013 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கினார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் கே.பி.ராமசாமி ஆண்களுக்கான இன்னர்வேர் பிராண்டான Fasoவை விற்பனை செய்யும்  நிறுவனமாக விரிவுபடுத்தினார்.

KPR மில் சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பின்னப்பட்ட ஆடைகள் தயாரிப்பிலும் நல்ல நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். KPR மில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உடைகள் முதல் நைட் டிரஸ் வரை என 128 மில்லியன் கணக்கில் எண்ணற்ற ஆடைகளை உற்பத்தி செய்கிறது. H&M, Marks & Spencer மற்றும் Walmart போன்ற கடைகளில் இந்த KPR மில் ஆடைகள் விற்கப்படுகின்றன. இதுவரை இல்லாத வகையில் KPR மில் Rs.1,100 கோடி மதிப்பிலான ஆடை ஆர்டர் புத்தகத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஆடை உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியுள்ள KPR மில் ஆனது ஒவ்வொரு ஆண்டும் லாபகரமாக ரூ.6,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.

Latest Slideshows

Leave a Reply