KPY Bala About Vijay : தளபதி விஜய் அரசியல் குறித்து பதிலளித்த KPY பாலா

நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கினாலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கலக்கப்போவது யாரு பாலா விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து பேசியது (KPY Bala About Vijay) சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் சத்தமாக கூறி வருகின்றனர். ஆனால் விஜய்யோ லியோ படத்தின் வெற்றி சந்திப்பில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன் என்று ஒரு ‘க்’ வைத்து கூறியிருந்தார். அப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என பலரும் உறுதியாக நம்பினர். அதைத்தான் அவர் மறைமுகமாகக் சொல்லியிருக்கிறார்.

தமிழக வெற்றி கழகம் :

விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது பலருக்கும் தெரியும். கட்சி தொடங்குவதை எப்படி, எங்கு அறிவிப்பார் என்பதுதான் அனைவரின் மனதிலும் இருந்த கேள்வி, விஜயகாந்த, கமல்ஹாசனை போல் பிரமாண்ட மேடை போட்டு சொல்வாரா என்பதுதான். ஆனால் சைலண்ட் சம்பவமாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நீண்ட அறிக்கையை வெளியிட்டு “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தளபதி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது, முதல்வராகும் போஸ்டர்கள் உலா வரத் தொடங்கின. தற்போது விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், அதற்கான பத்திரிக்கை வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் அரசியல் பயணம் ஒருபுறம் உற்சாகத்தை தந்தாலும், மறுபுறம் அவரது ரசிகர்களுக்கு சிறு சோகமும் ஏற்பட்டுள்ளது. அதாவது இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு மக்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுவேன். அரசியல் என்பது இன்னொரு தொழில் மட்டுமல்ல; இது ஒரு புனித சேவை என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் தளபதியை திரையில் பார்க்க ஏங்குகின்றனர்.

KPY Bala About Vijay :

மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள யூரோ கிட்ஸ் என்ற தனியார் பள்ளியில் இளைய தலைமுறையும் இந்தியாவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக KPY பாலா, அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இயக்குநர் மந்திரமூர்த்தி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

KPY Bala About Vijay : பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய KPY பாலா, தனக்கு தற்போது கல்யாணம் இல்லை என்றும், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு? விஜய் சார் பீக்கில் இருப்பதாகவும், தான் வீக்கில் இருப்பதாகவும், அவரை பற்றி பேசும் அளவிற்கு நான் பெரிய இடத்தில் இல்லை, அவர் என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும். நடிகர் விஜய் தனது கட்சிக்கு அழைத்தால் செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தன்னை கோர்த்து விடுவது போல இந்த கேள்வி இருக்கிறது, அரசியலில் செல்லும் அளவிற்கு தனக்கு அறிவு இல்லை பதவி ஆசை எல்லாம் தனக்கு இல்லை, சேவை செய்வதே தனது நோக்கம் என்று பதிலளித்தார். இவர் பேசியது (KPY Bala About Vijay) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply