KPY Bala Gifted a Bike : பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் பரிசளித்த KPY பாலா

பெட்ரோல் பங்க் ஊழியரின் இன்ஸ்டா ரீல்களில் டிரெண்டிங் செய்யும் வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பாலா, அந்த இளைஞருக்கு பைக் (KPY Bala Gifted a Bike) ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. அதையடுத்து குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அதில் தனது அட்டகாசமான நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்தார். குக் வித் கோமாலி நிகழ்ச்சிக்குப் பிறகு பாலாவுக்கு படிப்படியாக பட  வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாலா தற்போது தொகுப்பாளராக கலக்கி வருகிறார். சின்னத்திரையில் பிசியாக வலம் வரும் அவர், அதில் சம்பாதிக்கும் பணத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்கிறார்.

மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்குவது, மருத்துவ செலவுக்கு உதவுவது, ஏழைகளுக்கு பைக் வழங்குவது என பாரி வள்ளலாக திகழ்ந்து வருகிறார் பாலா. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ரீல்ஸ் ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆனது. அந்த ரீல்ஸில், ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு பைக் ஓட்டுநர் பெட்ரோல் நிரப்பச் செல்லும்போது, ​​அங்கு வேலை செய்யும் வாலிபர் பைக் உரிமையாளரிடம் இந்த கேமராவின் விலை எவ்வளவு என்று கேட்க, அவர் 43 ஆயிரம் என்று கூறுகிறார். உடனே அந்த இளைஞன் சிரித்துக்கொண்டே என் வீட்டில் பைக் வாங்க 10,000 ரூபாய் கேட்டால் செருப்பால் அடிப்பேனு சொல்றாங்க, என்று வேதனையுடன் சிரித்துக்கொண்டே தனது வறுமையை வெளிப்படுத்தினார்.

இந்த ரீல்ஸை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பாலா, அந்த இளைஞனின் ஆசையை நிறைவேற்றி பைக்கை வாங்கிக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் நிரப்பி அந்த இளைஞனுக்கு ( KPY Bala Gifted a Bike) பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போன அந்த இளைஞன், பாலாவைக் கட்டிப்பிடித்து கலங்கியபடி நன்றி சொல்லிவிட்டு அவருடன் பைக்கில் பயணம் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply