Kubera Movie Teaser : தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இணையதளத்தில் டீசர் (Kubera Movie Teaser) வெளியாகியுள்ளது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

குபேரா

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இருமொழிப் படமான ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தனுஷ் (Kubera Movie Teaser) நேரடியாக தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் குபேரா. இந்த படம் ஜூன் 20-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. நீண்ட காலமாக கமர்சியல் ரீதியான அதிரடி வேடங்களில் நடித்து வரும் தனுஷ், இந்த படத்தில் பிச்சைக்காரராக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kubera Movie Teaser - Platform Tamil

குபேரா டீசர் (Kubera Movie Teaser)

படத்தின் டீசரை பார்க்கும்போது படத்தின் கதை என்ன என்பதை கணிக்கமுடியவில்லை என்றாலும் கண்டிப்பாக இந்த படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பணம் மற்றும் புகழ் சம்மந்தமான கதையாக இருக்கும் என தெரிகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். டீசரைப் பார்த்த ரசிகர்கள், தனுஷ் படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக உணர்கிறார்கள். எனவே, இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறுகிறார்கள். டீசர் இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டீசர் வெளியான பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply