Kubera Nagarjuna First Look : குபேரா படத்தில் நாகார்ஜுனா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராயன் ஆகும். இந்த படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நடிகர் தனுஷ்-சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் (Kubera Nagarjuna First Look) வெளியிடப்பட்டது. இதில் தனுஷ் யாசகன் தோற்றத்தில் காணப்பட்டார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குபேரா :

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் யாசகன் லுக்கில் காணப்பட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Kubera Nagarjuna First Look) படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Kubera Nagarjuna First Look :

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனுஷ் நடித்துள்ள ராயன் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் ஜூன் அல்லது ஜூலையில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ராயன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தனுஷ்-சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி வரும் குபேரா படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாகார்ஜுனாவின் கேரக்டர் கிளம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கட்டு கட்டாக பணம் இருக்கிறது. அதன்பிறகு, மழையில் குடையுடன் நடந்து வரும் நாகார்ஜுனா, தரையில் கிடந்த ஒரு ரூபாய் நோட்டை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்ஸ் காணப்படுகிறது. இதில் நாகார்ஜுனா கண்ணாடி அணிந்து அசத்தியுள்ளார். படத்தில் இவரின் கதாபாத்திரம் வில்லனாக இருப்பதாகவும், பண மூட்டையுடன் காணப்படுவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply