Kukesh Wins World Chess Championship : உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் டி குகேஷ்

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே (Fide) சார்பில் 2024-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி (Kukesh Wins World Chess Championship) சிங்கப்பூரில் நடந்து வந்தது. இப்போட்டியில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்ற உலகின் நம்பர் 5-வது வீரரான தமிழகத்தை சேர்ந்த 18 வயதான டி குகேஷ் மற்றும் நடப்பு உலக சாம்பியன் ஆன சீனாவை சேர்ந்த டிங் லிரன் ஆகிய இருவரும் மோதினர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

இந்த போட்டியானது மொத்தம் 14 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் முதலில் யார் 7.5 புள்ளிகள் பெறுகிறார்களோ அவரே உலக செஸ் சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது சுற்று டிரா ஆனது. இதனையடுத்து நடைபெற்ற 3-வது சுற்றில் டி குகேஷ் தனது முதல் வெற்றியை (Kukesh Wins World Chess Championship) பதிவு செய்தார். மேலும் இதனையடுத்து நடைபெற்ற 4, 5, 6, 7, 8, 9, 10 என அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தது.

பிறகு நடைபெற்ற 11-வது சுற்றில் மீண்டும் டி குகேஷ் வெற்றிபெற்ற நிலையில் அடுத்து நடைபெற்ற 12-வது சுற்றில் டிங் லிரென் வெற்றிபெற்றதால் 12 சுற்றுக்கு பிறகு இருவரும் 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதன் பின்னர் நடைபெற்ற 13-வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதனால் ஒருவேளை கடைசி சுற்றும் டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க அதிவேகமாக காய்களை நகர்த்தும் சுற்றான ‘டைபிரேக்கர் முறை’ (Tiebreaker) கடைபிடிக்கப்படும் எனும் நிலை உருவானது.

இந்நிலையில் நேற்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது மற்றும் கடைசி சுற்று (Kukesh Wins World Chess Championship) பரபரப்பாக நடைபெற்றது. இதில் டிங் லிரென் வெள்ளை நிற காய்களுடனும், டி குகேஷ் கருப்பு நிற காய்களுடனும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர், இதனால் போட்டியானது டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக வீரர் டி குகேஷ் வெற்றி (Kukesh Wins World Chess Championship)

இந்நிலையில் சீனா வீரர் டிங் லிரென் ஆட்டத்தின் 58-வது நகர்த்துதலில் செய்த சிறிய தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட டி குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன்ஷிப் (Kukesh Wins World Chess Championship) பட்டத்தை 18 வயதில் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும் உலக செஸ் சாம்பியன் என்னும் மகுடத்தை விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு 2-வது முறையாக வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்திருக்கிறார் டி குகேஷ்.

Latest Slideshows

Leave a Reply