Kulasekarapattinam Spaceport : தமிழ்நாட்டின் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல் :

Chandirayan 3 வெற்றிக்கு பின்னர் நம் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்துக்கு சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத பெயராக மாறியிருக்கிறது. இதனையடுத்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்திலிருந்து (Kulasekarapattinam Spaceport) விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் திரு. சிவன் கூறியுள்ளார்.

தமிழக இளைஞர்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் :

தூத்துக்குடி, “குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்போது பல்வேறு விதமான புதிய உதிரிபாக தொழிற்சாலைகள் அங்கு உருவாகும். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார். தூத்துக்குடியில் உள்ள ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியானது, வஉசி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக செலுத்தியதை தொடர்ந்து தற்போது பெரிய அளவில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய ஆராய்ச்சிகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டு வருகிறது.

Kulasekarapattinam Spaceport - இந்தியாவின் இரண்டாவது இராக்கெட் ஏவுதளம் :

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) வின் முதல் ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது இராக்கெட் ஏவுதளம் நம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் (Kulasekarapattinam Spaceport) ரூ.1000 செலவில் அமைய உள்ளது. இதற்கான பணிகளும் தற்போதுதொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் (Kulasekarapattinam Spaceport) அமைப்பதற்கு தேவையான 2400 ஏக்கரில் இதுவரை 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

மீதமிருக்கும் 400 ஏக்கர் நிலம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கு காம்பௌண்ட் சுவர், கட்டடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டுக்குள் இப்பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, ராக்கெட் ஏவும் பணியும் தொடங்கும். இதற்கான கட்டுமான பணிகளுக்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இராக்கெட் ஏவுதளம் மூலமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். அதிகளவில் வேலைவாய்ப்பும் உருவாகும். ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கக் கூடிய வெளிநாட்டின் பல தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் புதிதாக வருவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. மேலும் செமி கண்டக்டர் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளையும் அரசானது தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply