Kuldeep Yadav ODI Performance: குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சு, உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவது உறுதி...

Kuldeep Yadav ODI Performance - சிறப்பான பந்துவீச்சு :

நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த சிறப்பான செயல்பாட்டினால் அவர் உலகக் கோப்பையின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டிக்கான கவுண்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் ஆசியக் கோப்பை மட்டுமே இடையில் உள்ளது. இது முடிந்த உடனேயே இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. அதற்கு பல்வேறு அணிகள் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்திய அணி தங்கள் பயிற்சியை வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடங்கியது. உலக கோப்பையில் ஜடஜாவுக்கு ஆதரவாக இன்னொரு ஸ்பின்னர் ஆக யார் இடம் பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை நேற்று சிறப்பான செயல்பாட்டின் மூலம் குல்தீப் யாதவ் தந்துள்ளார்.

நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் வெறும் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி ஆறு ரன்கள் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 114 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திற்கு பிறகு ஆட்டநாயகன் விருது பெற்றார் யாதவ். இது முடிந்த பிறகு அவர் பேசிய போது, இன்று நாங்கள் விளையாடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.  இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். அறிமுகப் போட்டியில் விளையாடிய முகேஷ் குமார் அவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாண்டியா மற்றும் தாகூர் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்த்தனர். இப்போதெல்லாம் நான் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே நன்றாக செயல்பட்டு வருகிறேன். தற்போதெல்லாம் எப்படி பந்து வீசுவது எப்படி விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதில் தான் முக்கிய கவனம் செலுத்துகிறேன்.

சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் :

சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகமாக தற்பொழுது ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். இந்த ஆடுகளமும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் எனக்கும் சாகல் அவருக்கும் போட்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருவருமே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Latest Slideshows

Leave a Reply