Kuldeep Yadav: குல்திப் யாதவ் திறமையை அப்போது எவரும் கண்டு கொள்ளவில்லை...

Kuldeep Yadav - India Vs West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் Kuldeep Yadav சிறப்பாக பந்துவீசி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அந்தத் தொடரை வெல்வதற்கு முக்கிய துருப்பு சீட்டாக இருந்தார். அவரின் பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறினர். அவரின் பந்து எந்த பக்கம் திரும்புகிறது என்பதையே கணிக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல் இந்த வருடம் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முக்கியமாக இந்த வருடம் ஒரு நாள் தொடர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்க உள்ளதால் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் Kuldeep Yadav அணியில் இருந்தால் அது மிகவும் சாதகமாக அமையும். இதேபோன்று இலங்கையில் நடக்க உள்ள ஆசிய கோப்பை தொடரிலும் அவருக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர் இதே போன்ற சிறப்பாக செயல்பட்டால் கண்டிப்பாக முதல் ஸ்பின்னர் ஆக அவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

குல்தீப் யாதவ் காயம் :

இந்த நிலையில் Kuldeep Yadav பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் ஜோஷி அவர்கள் கருது தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாட வந்தார். அப்போது அவர் இருந்த மோசமான கட்டத்தில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் அவர் ஆடி இருந்த கொல்கத்தா அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு களமிறங்குவது மிக பெரும் சவாலாக மாறியது. இந்திய அணியில் இருந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போது நான் தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தேன். அவரது காயத்தைப் பற்றி எவருக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் பயிற்சியாளர் குழுவிலே இருந்தேன். அவரது பந்துவீச்சில் நிறைய மாற்றங்களை செய்யுமாறு அறிவுறுத்தினேன். அது மட்டுமல்லாமல் அவரின் வேகத்தை அதிகரிக்கச் சொன்னேன்.

சுனில் ஜோஷி :

அவர் நீண்ட கடின உழைப்புக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். தற்போது பந்து வீசும் போது முன்னே பந்து வீசுவதை விட வேகமாகவும் சுழற்றியும் வீசுகிறார். இதனால்தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்வதற்கு திணறுகிறார்கள் என்று கூறி இருந்தார்‌.

Latest Slideshows

Leave a Reply