Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான (Kumki 2 Release Ban) படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இதில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் தம்பி ராமையா என பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

Kumki 2 Release Ban - Platform Tamil

‘கும்கி 2’ ஒரு குறிப்பு (Kumki 2 Release Ban)

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி 2’ படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலரும் நடித்துள்ளனர். அறிமுக நாயகன் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கும் மற்றும் யானைக்கும் இடையேயான பந்தத்தை இந்தப் படத்தில் பிரபு சாலமன் சிறப்பாக காட்டியிருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பை நிவாஸ் கே பிரசன்னா செய்திருக்கிறார். ஒளிப்பதிவு வேலையை சுகுமார் செய்துள்ளார். இந்த படத்தின்  ஷூட்டிங் முழுவதும் காடுகளுக்குள்ளே எடுக்கப்பட்டுள்ளது. இந்த கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. கும்கி 2 படம் வரும் Nov 14-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இந்த  கும்கி 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கும்கி 2 படத்தை வெளியிட தற்காலிக தடை

சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் இயக்குநர் பிரபு சாலமன் தன்னிடம் வாங்கிய ரூ.2.5 கோடி கடனை திருப்பி தராமல் கும்கி 2 படத்தை (Kumki 2 Release Ban) வெளியிடக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளார். கும்கி 2 படத்துக்கு பிரபு சாலமன் வாங்கிய ரூ.1.5 கோடியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆனது கும்கி 2 படத்தை வெளியிட தற்காலிக தடை ஒன்றை விதித்து உள்ளது. கடந்த 06.11.2025 அன்று கும்கி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் படத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அனைவரும் பாராட்டி பேசியுள்ளனர். 

Latest Slideshows

Leave a Reply