Kurinji Malar Book Review : குறிஞ்சி மலர் புத்தக விமர்சனம்

நா.பார்த்தசாரதி தனது வார்த்தைகளால் பேசாக் காதலாக குறிஞ்சி மலர் கதையை முழுவதுமாக (Kurinji Malar Book Review) சொல்லியிருக்கிறார். அழகு, அறிவு, அன்பு நிறைந்த கதாநாயகி, மனத்துக் கண் மாசிலனாக கதாநாயகன், காதலுக்கு எதிராக அந்தஸ்த்து, திருமணத்துக்கு எதிராக செவ்வாய் தோஷம் என கதையை சிறப்பாக கொடுத்துள்ளார் நா.பார்த்தசாரதி.

புத்தகத்தின் கதை :

பேராசிரியரும் தமிழறிஞருமான பூரணியின் தந்தை சிவனடி சேர்கிறார், பூரணி குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார். பூரணி தன் அப்பாவின் புத்தகங்களை வெளியீடும் அச்சகரிடம் பணம் கேட்கிறார். அவர் புத்தகம் விற்பனை இல்லை என ஏமாற்றுகிறார். இதனால் பல இடங்களில் வேலை தேடி அலைந்து பசியால் மயங்கி விழுகிறார். இதை பார்த்த மங்களேஸ்வரி தனது காரில் தனது வீட்டிற்கு தூக்கிச்சென்று மயக்கம் தெளிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு பூரணிக்கு அவர் குடும்பத்துடன் நட்பு ஏற்படுகிறது. மீனாட்சி அச்சகத்தின் சார்பாக புத்தகம் வெளியிட வரும் அரவிந்தன் பூரணியின் அறிவால் கவரப்பட, பூரணி அரவிந்தனின் இரக்க பண்பால் அவன் மீது அன்பாகிறாள். இவர்கள் இருவரும் அன்பாகிறார்கள், சில நாட்களுக்கு பிறகு மங்களேஸ்வரியும், அரவிந்தனின் முதலாளியும், அரவிந்தனை பூரணியை திருமணம் செய்திட கேட்கிறார்கள், அவனோ சிறிது காலம் எங்களை மனதால் வாழ அனுமதியுங்கள் என சொல்கிறான். பூரணி இலக்கிய சொற்பொழிவால் பல ஊர்களுக்கு சென்று சொற்பொழிவு நடத்துகிறாள்.

அச்சகத்தாரின் தொல்லையால் அரவிந்தன் மீனாட்சி அச்சகத்தை விட்டு வெளியேறுகிறான். இந்த நிலையில் பக்கத்து ஊரில் விஷக்காய்ச்சல் பரவி இருக்கும் நிலையில் மக்களுக்கு உதவி செய்ய அரவிந்தன் செல்கிறான். இந்த நேரத்தில் பூரணி சொற்பொழிவு முடித்துவிட்டு வருகிறார். தான் சமூக சேவை செய்ய சென்றிருப்பதாக பூரணியின் உள்ளுணர்வில் பயத்தை உண்டாக்க துன்பப்படுகிறான். இதற்கு இடையிலேயே பூரணி தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார். தேர்தல் முடிவு நாளில் பூரணியும் அரவிந்தும் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர். வெற்றி பெற்ற பூரணியை கொண்டாடும் வகையில், அரவிந்தன் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் பூரணியை அழைத்து வருகிறான். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

Kurinji Malar Book Review :

புத்தகத்தின் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அரவிந்தனையும், பூரணியையும் தமிழால் அபிஷேகம் செய்தாரா அல்லது அர்ச்சனை செய்தாரா என சொல்லும் அளவிற்கு கதையை எழுதி கதாபாத்திரங்களை ரசிக்க வைத்துள்ளார். தன் தந்தை சிவனை சேர்ந்த பிறகு தான் தன்னுடைய குடும்பத்தை பாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பூரணி தன்னுடைய அறிவு, திறமை, அன்பு ஆகியவற்றால் மூலைமுடுக்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி மக்களின் மனங்களில் இடம்பிடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த புத்தகத்தில் பெண்கள் தன் தந்தை இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பதை எடுத்துக்கூறும் அளவிற்கு கதையை கொடுத்துள்ளார் ஆசிரியர் நா.பார்த்தசாரதி.

Latest Slideshows

Leave a Reply