Kurinji Then Book Review : குறிஞ்சித்தேன் புத்தக விமர்சனம்

மலைவாழ் மக்களின் அன்பு வாழ்வில் ஒன்றன் பின் ஒன்றாக வரும் அடிப்படை வசதிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், மூன்று தலைமுறையில் நிகழும் மாற்றங்கள், மூன்று குடும்பங்களின் உறவில் நடக்கும் நிகழ்வுகள், மலையக மக்களின் பழக்கவழக்கங்கள் என கதையை அழகாக (Kurinji Then Book Review) படைத்துள்ளார். ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு பாணியைப் பின்பற்றுகிறார்கள். தான் எழுதும் நாவலை அந்த இடத்திற்கே சென்று ஆய்வு செய்வது ராஜம் கிருஷ்ணனின் பாணி ஆகும்.

புத்தகத்தின் கதை :

மாதைய்யனும் லிங்கைய்யாவும் சகோதரர்கள். மாதைய்யன் தன் தந்தையின் மூத்த தாரத்தின் மகன். தம்பி லிங்கைய்யா இளையாளின் மகன். தம்பி லிங்கைய்யா, அண்ணன் மாதைய்யன் மீதும், அண்ணி நஞ்சம்மை மீதும் மற்றும் குழந்தை ரங்கன் மீதும் அதிக பாசம் கொண்டவர் நில நல்லாள். ஒரு கிளை துளிர்க்க ஒரு கிளை காய்ந்திருப்பதா என சமைத்த மற்றும் சமைக்காத உணவை பொருட்களை அண்ணன் குடும்பத்திற்கு கொடுக்கிறார். மனைவி மாதி அவ்வப்போது முணுமுணுத்தாலும் கணவன் சொல்லை மீறாதவள். மகன் ஜோகியும் தந்தை சொல்வதை கேட்டு நடப்பவன்.  மாதைய்யன் திருவிழாக்கள் அல்லது இறுதி ஊர்வலங்களில் குடித்துவிட்டு ஆடுவதுமாக மட்டுமே இருப்பவர். அண்ணன் பாட்டுக்கு தம்பி தீவிர ரசிகர். மாதைய்யனின் முதல் மனைவி இறந்துவிட குழந்தைகளான ரங்கனையும், அவன் தங்கையையும் இரண்டாவதாக வந்த நஞ்சம்மை வறுத்தெடுக்கிறார்கள்.

காட்டில் உள்ள தெய்வத்தை வழிபட, ஒரு விடலைச் சிறுவன் திருமண வயதை அடையும் வரை (சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டு வரை) அங்கேயே இருக்க வேண்டும், மேலும் கோயிலுக்கு வருபவர் கொடுக்கும் பால், பழம் மற்றும் அவர் சமைக்கும் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். இடையில் எக்காரணம் கொண்டும் வீட்டுக்கு வரக்கூடாது. ரங்கனை நல்வழிப்படுத்த ஒரு வாய்ப்பாக எண்ணி பூஜை செய்ய தம் கனவில் ரங்கனை தெய்வம் அடையாளம் காட்டியதாக அவர் கூறுகிறார். (கனவில் வருவது ஜோகி) மலையடிவாரத்தில் உள்ள ஊருக்குச் சென்றால் எப்படியாவது சம்பாதித்தால் நல்ல உணவும், உடையும் கிடைக்கும் என்று நினைக்கும் ரங்கன், தன்னை அர்ச்சகராகத் தேர்ந்தெடுத்ததை அறிந்ததும், சிற்றப்பா வீட்டிலிருந்தே பணத்தைத் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறான். ஜோகி பூசாரியாக சென்றுவிட, ​​தந்தை உடல்நலம் பாதித்ததைவிட குடும்பம் வறுமையில் வாடியது. காலங்கள் செல்லச் செல்ல, ஊருக்குத் திரும்பும் ரங்கனை, தவறான வழியில் பணக்காரனாகி விட்டதாகக் கருதி லிங்கய்யா அடிக்கிறார். இதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

Kurinji Then Book Review :

கிருஷ்ணன் படிப்பாலும், நல்ல செயலாலும் ஊரில் மரியாதையும் பெறுகிறான், ரங்கன் பொறாமையாலும், காழ்ப்புணர்ச்சியாலும் அதிகாரத்துடன் பலவகையில் போட்டி போடுகிறான் (கிருஷ்ணன் அப்படி நினைக்கவில்லை). அடுத்தடுத்த மாற்றங்களால் கதை என்பதைவிட மலைவாழ் மக்களின் வாழ்வுடன் நம்மை வாழ வைத்துள்ளார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன்.

Latest Slideshows

Leave a Reply