Kushi Movie Review : குஷி படத்தின் திரை விமர்சனம்...

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள திரைப்படம் குஷி ஆகும். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை (Kushi Movie Review) காணலாம்.

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர். குஷி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவருமே கடைசியாக நடித்த படம் தோல்வியானதால் குஷி படத்தின் மீது மலைபோல் நம்பிக்கை வைத்துள்ளனர். படத்தைப் பார்த்த ரசிகர்கள், எப்படி இருக்கிறது என்று விமர்சனம் தெரிவித்துள்ளனர், அதன் தொகுப்பை காணலாம்.

கதை சுருக்கம் :

காஷ்மீரில் அரசு வேலை பார்க்கும் விஜய், சமந்தாவை சந்தித்ததும் காதல் கொள்கிறார். வழக்கம் போல் கதாநாயகியை தன் வலையில் இழுக்க பல மாய வித்தைகளை செய்கிறார். காதலுக்கு சமந்தா ஓகே சொன்னாலும் சமந்தா வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக, பதிவு திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழத் தொடங்குகிறார், மேலும் இருவருக்கும் இடையே வாழ்க்கை இறுக்கமடையத் தொடங்குகிறது. முதலில் கருத்து வேற்றுமையில் ஆரம்பித்து இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சண்டைக்கு என்ன காரணம், இருவரும் சமரசம் செய்தார்களா என்பதுதான் படத்தின் மீதி கதையாகும்.

Kushi Movie Review :

குஷி ஒரு சுத்தமான காதல் நகைச்சுவைத் (Kushi Movie Review) திரைப்படமாகும். கதை எளிமையாக இருந்தாலும் பல இடங்களில் நகைச்சுவையாக இருக்கிறது. வழக்கமான கதை என்பதால் சில இடங்களில் படம் நீளமாக இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், கடைசி 30 நிமிடங்களில் வரும் க்ளைமாக்ஸில் நகைச்சுவை காட்சிகளும், உணர்ச்சிகரமான காட்சிகளும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. சமந்தா, விஜய்தேவரகொண்டா ஜோடி பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சக நடிகர்களின் தேர்வும் நன்றாக உள்ளது. பாடல்கள் சூப்பர் உள்ளது. நகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை என்று கூறுகின்றனர். இரண்டாவது பாதியில் பலமான மோதல் இல்லை. கிளைமாக்ஸ் நன்றாக உள்ளது. நீண்ட படம் மட்டும் ஆங்காங்கே நகைச்சுவை உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆவரேஜ் (Kushi Movie Review) என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply