Kyn App Launch : சென்னையில் Kyn மீடியா சேவை தொடங்கப்பட்டது
சென்னையில் கடந்த 20/02/2023 அன்று KYNhood Technologies Company நிறுவனம் சார்பில், புதிய kyn சமூக வலைதளமானது (Kyn App Launch) அறிமுகம் செய்யப்பட்டது. மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த செயலியைத் தொடங்கி வைத்தார்.
Kyn App Launch - இந்த செயலி குறித்து Kynhood Technologies நிறுவனத்தின் தலைமை அதிகாரி காயத்ரி தியாகராஜன் கூறியதாவது :
Kynhood Technologies நிறுவனமானது இந்தியாவில் முதல் ஹைப்பர் லோக்கல் சமூக வலைதளமான kyn என்ற புதிய சமூக வலைதள செயலி (Kyn App Launch) வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த செயலி ஆனது,
- தொலைக்காட்சி
- செய்தித்தாள்
- சமூக வலைதளம்
என மூன்றின் கலவையாக இருக்கும். இப்போது Kynhood Technologies ஆனது சென்னையில் களம் இறங்கி இருக்கிறது. இந்த செயலியில் Kynhood Technologies ஆனது சென்னையை 14 மண்டலங்களாக பிரித்து உள்ளது. மக்களின் திறமையை இந்த kyn செயலி நிச்சயம் வெளிக்கொண்டு வரும். இந்த kyn செயலி மூலம் பெண் தொழில்முனைவோர் இல்லத்தரசிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் தங்களின் பொருட்களை/தயாரிப்புகளைச் சுலபமாக விற்பனை செய்ய முடியும். மேலும், பெரிய நிறுவனங்களும் தங்களை சுலபமாக ஹைப்பர் லோக்கல் சந்தையில் விளம்பரப்படுத்தி கொள்ள kyn வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறினார்.
Kyn - ஒரு குறிப்பு :
Kyn என்பதன் விரிவாக்கம் – Know Your Neighbourhood ஆகும். Kyn என்பது ஒரு சமூக வலைதள செயலி ஆகும். டிஜிட்டல் மாற்றம் என்பது வெறும் பேச்சு வார்த்தையாக இல்லாமல் தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. ஹைப்பர்-லோக்கல் முறையில் உருவான இந்த Kyn மீடியா சேவை தள தொடக்கம் ஆனது,
- சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும்.
- சென்னையில் தொழில்நுட்பத்தின் மூலம் சிறு வணிகங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்தும்.
- நிலையான வளர்ச்சி மற்றும் சமூக நீதியை ஆதரிக்கும்.
- தொழில்நுட்பத்திற்கும் பொதுவான தொழில்முனைவோருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும்.
- AI ஐ மேம்படுத்தும்.
- நிச்சயமற்ற பொருளாதார நிலப்பரப்பில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கத்தையும் மற்றும் புதிய திசையையும் வழங்கும்.
- தொழில்முனைவோர் இணைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்.
- சமூகத்தில் உள்ளூர் வணிகங்களுக்கான சந்தை இடம்.
- தனி நபர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும்.
- இணையப் பயன்பாட்டை அதிகரிக்கும்.
- KYN இயங்குதளம், உயர்-உள்ளூர் சமூகங்களுக்கான தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக ஊடகங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும்.
- இதன் மூலம் உள்ளூர் அடையாளங்கள், வீட்டுத் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் செழிக்க ஒரு தனித்துவமான இடத்தை வழங்கும்.
- இந்த தளமானது வணிக வளர்ச்சிக்கான பாதுகாப்பான மற்றும் நெறிமுறையான இடமாக இருப்பதை உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், விற்பனை வருவாயை அதிகரிக்கவும், சந்தையை விரிவாக்கவும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் சக்தியைப் பயன்படுத்துகிறது.
Kyn App Launch : அறிமுக விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்த ராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Latest Slideshows
-
11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்
-
Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு
-
Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்
-
IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்