Lal Salaam Audio Launch Update : லால் சலாம் இசை வெளியீட்டு விழா

Lal Salaam Audio Launch Update :

3, வை ராஜா வை, போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கிறார். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், “லால் சலாம்” படத்தின் டீசர் வெளியானது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் லால் சலாம் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தில் இருந்து ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் சிறப்பு வீடியோவை வெளியிட்டனர். இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இப்படம் 2024 பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளனர். ஆனால் இந்த முறை சென்னை நேரு அரங்கில் இல்லாமல், ஸ்ரீ ராம் பொரியல் கல்லூரியில் டிசம்பர் 21 ஆம் தேதி நடத்த முடிவு (Lal Salaam Audio Launch Update) செய்யப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி ஸ்டோரி கூறியது போல், இந்த முறை கல்லூரியில் நடப்பதால் சற்று வித்தியாசமாக இருக்கும் (Lal Salaam Audio Launch Update) என கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply