Lal Salaam Movie New Poster : லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் (Lal Salaam Movie New Poster) மற்றும் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். முன்னதாக 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதுதவிர ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசைதான் என்ற பாடலையும், அப்படத்தில் ரீமாசென்னுக்கு டப்பிங் குரலையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணத்தை முறித்துக் கொண்ட பிறகு ‘பயணி’ என்ற மியூசிக்கல் வீடியோவை இயக்கியுள்ளார். பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘லால் சலாம்’ படத்தை இயக்கினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, லைகா தயாரிப்பில், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் வேடத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை என பல இடங்களில் நடந்து முடிந்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் சென்னை சாய் ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜய் பற்றி ரஜினிகாந்த் பேசிய பேச்சு வைரலாக பரவியது. அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது தந்தை சங்கி அல்ல என்று கூறியது சர்ச்சையானது. இது படத்திற்கான விளம்பரமாகவும் அமைந்தது.

Lal Salaam Movie New Poster :

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் லைகா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, ‘லால் சலாம்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை எக்ஸில் ஷேர் செய்துள்ளனர். அந்த போஸ்டரில் (Lal Salaam Movie New Poster) நடிகர் ரஜினிகாந்த் வெள்ளைத் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருப்பதையும், அவருக்குப் பின்னால் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருப்பதும் அந்த போஸ்டரில் உள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் போஸ்டர் (Lal Salaam Movie New Poster) இணையத்தில் பரவி வருகிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது தற்போது படம் வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் ட்ரெய்லரை காண காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply