Lal Salaam Movie Update : பொங்கல் ரேஸிலிருந்து விளகிய லால் சலாம்

Lal Salaam Movie Update :

நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக (Lal Salaam Movie Update) கூறப்படுகிறது.

ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் மற்றும் இதர விஷயங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் கதை கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகாது (Lal Salaam Movie Update) என்று தெரியவருகிறது.

ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்த மும்பை படப்பிடிப்பின் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தற்போது செயல்படாததால் அதன் காட்சிகளை மீட்க படக்குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஹார்ட் டிஸ்க்கை செயல்படுத்த அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இப்படத்தில் இரண்டு பாடல்களை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தனது தேதிகளை ஒதுக்கி பாடல்களை கொடுத்து படமாக்கயுள்ளதாகவும், இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என முன்னதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் ரஜினி பிறந்தநாளில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு முன் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினியின் மூன்றாவது படம் லால் சலாம். அவர் தனது தந்தையை இயக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றும் அது தனது கனவு நனவான தருணம் என்றும் அவர் இன்ஸ்டாகிராமில் முன்பு கூறியிருந்தார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் படம் வெளியாகும் தேதி விரைவில் (Lal Salaam Movie Update) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply