Lal Salaam Review : லால் சலாம் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தின் திரை விமர்சனம் (Lal Salaam Review) குறித்து தற்போது காணலாம். நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்து கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம் ஆகும். இந்த திரைப்படம் இன்று சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 3 மற்றும் வை ராஜா வை படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக ஐஸ்வர்யா ரஜினி இப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் (Lal Salaam Review) படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இப்படம் ரஜினியின் அடுத்த பாட்ஷா என்று ரசிகர்கள் கொண்டாட்டு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் செந்தில், சரண்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பல புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். படம் அதிக மக்களை சென்றடைய இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் படத்தின் விமர்சனத்தை (Lal Salaam Review) தற்போது காணலாம்.

படத்தின் கதை :

1993ல் இருந்து கதை தொடங்குகிறது. முரார்பாத் என்ற கிராமத்தில் ஒற்றுமையோடும், மத நல்லிணக்கத்துடனும் வாழும் இந்து-முஸ்லிம் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டால் ஏற்படும் சிறு சிறு மனக்குறைகளை தனக்குச் சாதகமாக மாற்ற அங்குள்ள அரசியல்வாதி இரு சமூகத்தினரிடையே மதக் கலவரத்தைத் தூண்டுகிறார். இதனால் ஒன்றாக இருந்த இரு பிரிவினரிடையே பெரும் வன்முறை ஏற்படுகிறது. இந்த சண்டையில் ரஞ்சி டிராபிக்கு தகுதி பெற்ற ரஜினியின் மகன் விக்ராந்த் இந்த சண்டையில் பாதிக்கப்பட்டுள்ளார். விஷ்ணு விஷால் காதலிக்கும் பெண் அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படுகிறது. இந்த கோபத்தால் ஊர் திருவிழாவிற்கு தேர் கொடுத்து கொண்டிருந்த அரசியல்வாதி தேரை கொடுக்க மறுக்கிறார். கோவிலுக்கு புதிய தேர் வாங்க விஷ்ணு விஷால் மற்றும் அவரது கிரிக்கெட் குழுவினர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா, ரஜினியின் ஆட்கள் விஷ்ணு விஷாலை என்ன செய்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதையாகும்.

Lal Salaam Review :

படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை வலியுறுத்தும் ஒரு மையக் கருத்து மத நல்லிணக்கம். மொய்தீன் பாயாக வரும் சூப்பர் ஸ்டார் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தை சிறப்பாக கையாண்டது மட்டுமின்றி, தனது ரசிகர்களுக்கு ஒரு சின்ன விருந்தையும் கொடுத்துள்ளார். ஊர் கோவில் பூசாரியாக வரும் செந்திலும், ஊர் தலைவர் வேடத்தில் நடிக்கும் தம்பி ராமையாவும் நம்மை கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

இருவருக்கும் கொடுத்த டயலாக்குகள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளியது. விஷ்ணு விஷாலின் காதலியாக வரும் அனந்திகா சனில்குமார் தனது சில காட்சிகளிலேயே மனம் கவர்கிறார். விவேக் பிர்ன்னா, தங்கதுரை ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களுக்குப் பொருந்துகிறார்கள். விஷ்ணு விஷாலின் நடிப்பால் படம் நிறைவடைகிறது. மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கும் சில விஷயங்களை படம் முழுக்க நேரடியாக காட்டி தடைகளை நீக்கி மத நல்லிணக்கத்துடன் வாழ்வது எப்படி என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

லால் சலாம் படத்தின் மூலம் தான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லி தேர்ந்த இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்கு ஏற்ப இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் கச்சிதமாக இசையமைத்துள்ளார். இரண்டாம் பாதி சற்று இழுத்தடித்தாலும் குடும்பம் மட்டுமின்றி சமூகமும் கொண்டாட வேண்டிய படம். இப்படத்தின் கதையை சிறப்பாக காட்சிப்படுத்தி ரசிகர்களை திருப்திபடுத்திய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் (Lal Salaam Review) குவிந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply