Lal Salaam Trailer : மிரட்டலாக வெளியான லால் சலாம் ட்ரெய்லர்

நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திற்குப் பிறகு, பிப்ரவரி 9 ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது லால் சலாம். படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் பெரிய அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில், தம்பி ராமையா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரை (Lal Salaam Trailer) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Lal Salaam Trailer :

படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வரும் நிலையில், முன்னதாக படத்தின் போஸ்டர்கள், வீடியோக்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் (Lal Salaam Trailer) வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினரின் உழைப்பு இந்த ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ரஜினி கூறியது போல் ஒரு ஊரின் தேர்த்திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டி, இதன் மூலம் ஏற்படும் பிரச்சனையை படம் பேசுவதை இந்த ட்ரெய்லர் மூலம் அறிய முடிகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் (Lal Salaam Trailer) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்டு ரசிகர்களை கடுப்பேற்றியது. கேமியோ ரோலில் நடித்தாலும், ரஜினியின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

ட்ரெய்லரில் உள்ளூர் கதை ஒரு கட்டத்தில் பம்பாய் நோக்கி நகர்வதாக தெரிகிறது. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு, கதையில் ரஜினியின் பங்கு, கிரிக்கெட்டின் முக்கியத்துவம் இவையெல்லாம் எந்த புள்ளியில் இணையும் என பல கேள்விகளை எழுப்புகிறது. தம்பி ராமையா, செந்தில் மற்றும் பலரின் உணர்ச்சிகரமான நடிப்பை இந்த ட்ரெய்லர் (Lal Salaam Trailer) மூலம் பார்க்கலாம். விஷ்ணு விஷாலின் நடிப்பும் படத்திற்கு முக்கியப் பங்களிப்பை அளித்திருப்பதையும், ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply