Lal Salaam : லால் சலாம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்

Lal Salaam - உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சூப்பர் ஸ்டார், கேமியோ ரோலில் நடித்த Lal Salaam 2024 பொங்கலுக்கு தினத்தன்று வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையடுத்து Lal Salaam படத்தில் இருந்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இயக்குனர் நெல்சன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியிருந்தார். அதன்படி முதலில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் Lal Salaam படத்தில் நடித்து முடித்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே என்ட்ரி கொடுக்க உள்ளார். ரஜினிகாந்தின் மும்பை மொய்தீன் பாய் என்ற கேரக்டர் செம மாஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரஜினியின் மொய்தீன் பாய் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக கொண்டு ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் 2023 டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் Lal Salaam படம் அடுத்த ஆண்டு பொங்கல் முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 ஆகிய படத்துடன் Lal Salaam திரைப்படம் மோதுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, லால் சலாம் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதனை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் லால் சலாம் படத்தின் புரமோஷன் தரமாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் சமீபத்தில் முடித்தார். அதையடுத்து த.செ.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றார். லால் சலாம் ரிலீஸ் தேதி, தியேட்டர் உரிமை பற்றிய அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், Lal Salaam படத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply