Lal Salam Movie Shooting: ரஜினிகாந்தை பார்க்க திரண்ட ரசிகர்கள்

கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் உள்ள AFT மில்லில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

வை ராஜா வை, 3 ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக 80களின் பிரபல நடிகை ஜீவிதா நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் செந்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கிறார். தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில், தற்போது ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலான நடையுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் காட்சி முன்னதாக வெளியாகி இணையத்தில் லைக்ஸை பெற்றது. அந்த வகையில் தற்போது ரஜினியின் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் கார் கூரை மீது ஏறி தன் ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த படத்தில் உலகக்கோப்பையை வென்று கொடுத்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ரஜினியுடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்தை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply