Laser Treatment To Remove Blockages In The Heart : இதயக் குழாய்களில் அடைப்புகளை அகற்ற லேசர் சிகிச்சை

நாக்பூரில் நடந்த மருத்துவ கான்க்ளேவ்வில் நமது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை லேசர் மூலம் அகற்றும் சிகிச்சை முறை (Laser Treatment To Remove Blockages In The Heart) ஆனது அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல்கள் ஆனது அதிகரித்துள்ளது. இந்த நவீனக் காலத்தில் IT துறையில் தொடங்கி பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல்கள் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழல்கள் ஆனது நமது உடலில் பல வித சிக்கல்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதய நாளங்களில் அடைப்புகளைக் கூட ஏற்படுத்துகின்றது.

இதய நாளங்களில் அடைப்பு என்பது முன்பெல்லாம் ரொம்பவே அரிய விஷயமாக இருந்து வந்தது. இன்றைய  காலகட்டத்தில் இதய நாளங்களில் அடைப்பு என்பது பரவலாக ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதய நாளங்களில் இந்த அடைப்பு ஏற்பட்டால் அதற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆனால், இதய நாளங்களில் ஏற்படும் இந்த அடைப்பிற்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் ஆப்ரேஷன் செய்தால் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க  வேண்டும். இந்த ஆஞ்சியோபிளாஸ்டிக் ஆப்ரேஷன் மூலம் உள்ளே பொருத்தப்படும் ஸ்டென்ட் காரணமாக நோயாளிகளுக்கு அசவுகரியம் ஏற்படும். அதனால் இந்த ஆஞ்சியோபிளாஸ்டிக் முறைக்கு மாற்றாக லேசர் சிகிச்சை முறையை (Laser Treatment To Remove Blockages In The Heart) மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவர்கள் இந்த லேசர் ஒளி சிகிச்சை முறைக்கு நல்ல பலன் கிடைப்பதாக கூறுகின்றனர்.

Laser Treatment To Remove Blockages In The Heart :

இந்த லேசர் சிகிச்சை (Laser Treatment To Remove Blockages In The Heart) ஆனது ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தின் சீரான ஓட்டத்தை அனுமதிக்க ரத்த நாளங்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையாகும். லேசர் சிகிச்சை முறையில் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளில் செலுத்தப்படும் லேசர் ஒளி அந்த அடைப்புகளை ஆவியாக்கும். இதயத்தில் உள்ள ரத்த குழாய்களைக் காயப்படுத்தாமல் லேசர் ஒளி தமனியில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும். லேசர் ஒளி ரத்தக் குழாய்களை மிகவும் திறம்படச் சுத்தப்படுத்துகிறது.

மருத்துவர்களால் மிக எளிதாக பலூன்கள் மற்றும் ஸ்டென்ட்களை இந்த லேசர் ஒளி சிகிச்சை முறையில் உள்ளே அனுப்ப முடிகிறது. மேலும், ஸ்டென்ட்டின் ஒரே இடத்தில் இருப்பதை இந்த லேசர் ஒளி முறை உறுதி செய்கிறது மற்றும் ஆபத்தும் குறைவு ஆகும். இந்த லேசர் ஒளி முறையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஸ்டென்ட் கூட தேவைப்படாது. நோயாளிகள் இந்த லேசர்  ஒளி சிகிச்சை முறையில் குறைவான நாட்களே மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும் என்பதால் பெரும்பாலான நோயாளிகள் குறுகிய காலத்திற்குள் தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்புகிறார்கள். நோயாளிகளுக்குப் பல வழிகளில் இந்த லேசர் ஒளி சிகிச்சை முறை நன்மை பயக்கிறது

Latest Slideshows

Leave a Reply